மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வழிசமைத்து தரவேண்டும் எனக் கோரி பிரேரணை கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது
தீர்மானத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலயத்துள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் சாவகச்சேரி பிரதேச சபையில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த உறுப்பினர் கொழும்பில் இருந்து சென்ற விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
இதேவேளை குறித்த பிரதேச சபைத் தலைவரையும் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சமுகமளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.