இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்!- சென்னையில் நரேந்திர மோடி பேச்சு

modi_gujarat_cmஇலங்கை தமிழர்கள் போன்று பல்வேறு நாடுகளில் துன்பப்படும் இந்திய வம்சாவளிகள் பாதுகாக்கப்படல் அவசியம் என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

இந்தியா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மோடி தொடர்ந்து பேசியதாவது,

இந்திய கலாசாரம், உறுதித்தன்மை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

அத்துடன் வெளிநாட்டுக்கொள்கை வகுக்கப்படும் போது இந்தியாவில் உள்ள மாநிலங்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு நாடு தங்களின் குடிமக்களை பாதுகாப்பதுடன் இதர நாடுகளில் உள்ள நம் மக்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்கள் வேறு நிறத்தில் உள்ள பாஸ்போர்ட்களை வைத்திருக்கலாம். ஆனால் நமது இரத்தத்தின் நிறம் ஒன்றுதான்.

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

TAGS: