சிங்கள மக்களை வெளியேற்ற சிறிதரனுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது!

navatkuli_srimp1சிங்கள மக்களை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிங்களப் பத்திரிகையொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாவற்குழியில் தங்கியுள்ள 136 சிங்கள குடும்பங்களை விரட்டியடிக்க சிறிதரன் முயற்சிக்கின்றார்.

இந்த முயற்சிக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சிறிதரன், வட மாகாண சபை உறுப்பினர் காண்டீபன், தீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் என்.கிஸோர் ஆகியோர் நாவற்குழி சிங்கள மக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, சிங்கள மக்கள் தங்கியிருக்கும் குறித்த பகுதிக்கு மின்சாரத்தை வழங்கவும் சாவகச்சேரி பிரதேச சபை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில், நாவற்குழியில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கம், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: