பள்ளிக்கூடங்கள் என்ன மாடு வெட்டும் கசாப்புக் கடைகளா?, குலா காட்டம் !

Cow Slaughter1புனித ஹஜ்ஜுப் பெருநாள், முஸ்லீம்களின் தியாகத்தை வலியுருத்தும் திருநாள். அன்பையும்  அரவணைப்பையும் மனித நேயத்தையும் விளக்குவது ஈகைப் பெருநாள். அப்படி அந்த புனிதத் தன்மை வாய்ந்த இஸ்லாத்தை களங்கப்படுத்தும் வண்ணம், இஸ்லாமிய நெறிகளை போதிக்கிறோம் என்று சொல்லி  மிருக வதையை, பள்ளி வளாகத்தில் செய்திருப்பது பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறுகிறார் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.

 

இந்தியர்களை புண்படுத்தும் செயல்

 

அரசாங்கப் பள்ளிகளில் எல்லா இன, மத மாணவர்களும் பயில்கின்றார்கள்.  கற்றலும் கற்பித்தலும் நடைபெறும் பள்ளிக்கூடங்களில் அன்பு, மனித நேயம், இன ஒற்றுமை, நல்லிணக்கம், தேச பக்தி இவைகளையும் வலியுறுத்திப் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உயரிய இடத்தில், இஸ்லாமிய சமய மாணவர்கள் அவர்களின் மதச் சடங்குகளின் ஒன்றான பிராணிகளைப் பலியிடுதல் எப்படி என்பதனை  விளக்குவதற்காக ஒரு பசுவினை, அதுவும் இந்துக்கள் தெய்வமாக மதிக்கும் ஒரு பிராணியை, அவர்கள் கல்விக்கூடத்திலேயே பலியிட்டிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று குலசேகரன் கூறுகிறார்.

 

“மூன்று இன மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்தில் பசுவை பலியிட அனுமதி கொடுத்த அந்த பள்ளி தலைமை ஆசிரியரின் செயாலானது மலேசியாவின் மூன்றவது பெரிய இனமான இந்தியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது”, என்று அவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.

 

இச்செயல் பள்ளி மாணவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி முஸ்லீம், முஸ்லீம் அல்லாத மணவர்களிடையே நிலவும் உறவைm-kulasegaran பாதிக்கச் செய்துவிட்டது என்பதை வலியுறுத்திய குலசேகரன்,  தேசியப் பள்ளிகள் மக்களின் முதல் தேர்வாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் கொக்கரிக்கும் இவ்வேளயில் இது போன்ற அருவருப்பான செயல்கள் பள்ளி வளாகங்களிலேயே நடைபெறுவது எவ்வாறு அந்த நோக்கத்தை நிறைவேற்ற  உதவும் என்று அவர் வினவினார்.

 

குர்பானை அனுமதிக்கும் கல்விச் சட்டம் உண்டா?

 

அதோடு, பிரதமர் முன்னெடுத்த ஒரே மலேசிய கொள்கைக்கு எதிராகவும் கூட இந்த மிருக பலி அமைந்துவிட்டது.

 

மலேசிய அரசியல் சட்டத்தில் மற்ற இனங்களும் அவரவர் மதங்களை அச்சமின்றி பேணாலாம் என்கின்ற உத்தரவாதத்திற்கும் பங்கம் விளைவித்துவிட்டது.

 

இஸ்லாத்தில் கட்டாயத்திற்கு இடமில்லை என்கின்ற தெளிவான கோட்பாடு இவ்விடத்தில் மீறப்பட்டுள்ளது என்பதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணருவார்களா?”, என்றவர் வினவினார்.

 

பள்ளி வாளாகத்தில் குர்பான் செய்யலாம் என்று எந்த கல்விச் சட்டத்தில் இருக்கிறது?

கல்வி அமைச்சின் ஏதாவது ஒரு சுற்றறிக்கையில் தேசியப்பள்ளிகளில்  மிருகங்களை குர்பான் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதனை நான் கல்வி அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன் என்று குலசேகரன் மேலும் கூறினார்.

 

“இது போன்று 2007 இல் நாடாளுமன்ற வளாகத்தில் பசு துடிக்கத் துடிக்க பலியடப்பட்டபோது,  அதைக் காண சகியாமல் எனக்கு வயிறு குமட்டி வாந்தியே வந்துவிட்டது. இதனை உடனடியாக நான் நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியபோது, அதற்கு அம்னோகாரர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் கூச்சலும் கிளம்பியதுஎன்பதை நினைவு கூர்ந்த குலசேகரன்,  “அன்றைய எனது விவாதத்தின் நியாயத்தை உணர்ந்த அப்போதைய மக்களவை தலைவர் நாடாளுமன்ற வளாகத்தில் இனிமேல் மிருக பலி கொடுக்கப்படாது என்று உறுதி மொழி வழங்கினார். அது இன்று வரையில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.

 

அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் உண்மையிலேயே எப்படி பிராணிகளை இஸ்லாமிய முறைப்படி குர்பான் செய்யலாம் என்பதை விளக்க விரும்பியிருந்தால், அதற்காக  அப்பள்ளி மாணவர்களை  அவர் பள்ளிவாசல்களுக்கு அழைத்துச் சென்று காட்டியிருக்கலாம் என்பதைச் சுட்டிக் காட்டிய  குலசேகரன், “அவர் அப்படி செய்யாமல் மற்ற இன, மத மாணவர்கள் பயிலும் பள்ளியில் அதைச் செய்ததால் அவரின் மத வெறியைத்தான் மற்ற மாணவர்களுக்கு வெளிப்படுத்தினாரே தவிர அந்த மதத்தின் மகத்துவங்களை அல்ல. இப்படிப்பட்ட தலைமை ஆசிரியர் மேல் மாணவர்களுக்கு எப்படி மரியாதையும் நன்மதிப்பும் ஏற்படும் என்று அவர் மேலும் கூறினார்.

 

ஏன் முடியாது?

 

முகநூலில் அந்த பள்ளியின்   தலைமை ஆசிரியருக்கும் பொது மக்களில் ஒருவருக்கும் இடையில் நடைபெற்ற  தொலை பேசி உரையாடலை தாமும் கேட்டதாகக் கூறிய குலசேகரன்,  அப்பொழுது, அந்த ஒருவர் கேட்ட நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அந்தத் தலைமை ஆசிரியர் தடுமாறியது வேடிக்கையாகவும் முட்டாள்தனமாகவும் இருந்தது என்றார்.

 

நீங்கள் பசுவை குர்பான் கொடுத்தது போல வேறொருவர் பன்றியை உங்கள் பள்ளியில் குர்பான் செய்தால் நீங்கள் அனுமதிப்பீர்களா?”, என்ற கேள்விக்கு  முடியாது என்று அழுத்தமாகப் பதில் சொன்ன அந்த தலைமை ஆசிரியர் அதற்கான காரணத்தை கேட்ட பொழுது பதில்  சொல்ல முடியாமல் உளறினார்

 

வர வர கல்விக்கூடங்கள் மத இன துவேஷங்களை எழுப்பும் இடமாக மாறி வருவதை இந்த சமுதாயம் கண்கூடாகக் கண்டு வருகிறது. அதுவும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவே இந்தத் துவேஷங்கள் எழுப்பப்படுகின்றன என்பது வேதனைக்குரியதாகும் என்பதை வலியுறுத்திய குலசேகரன், ஸ்ரீ பெஸ்தினா  பள்ளியில் கழிவறை உணவறையாக மாறிய குளறுபடி முழுமையாக தீர்க்கப்படுவதற்குள் இப்படி இன்னொரு சம்பவம் நடந்திருப்பது  மலாய்க்காரரல்லாத இனத்தினரை மிகவும் சங்கடமடைய வைக்கிறது என்றாரவர்.

 

பக்திமான்கள் செய்வார்களா?

 

1 mic“கல்வி அமைச்சு இவற்றை எல்லாம் முழுமையாக துடைத்தொழிக்க ஆக்ககரமாக  செயலாற்றவில்லை என்பதனை இது காட்டுகின்றது. அல்லது,  இது அராசாங்கத்தின் தூர நோக்கு திட்டத்தின் ஆரம்ப கட்டமோ என்று கூட  மக்கள் சந்தேகிக்கும் வகையில் உள்ளது.

 

போகிற போக்கை பார்த்தால் புதிய கல்வி உருமாற்று திட்டத்தில் பசுக்களை எப்படி குர்பான் செய்வது என்கின்ற பாடத்திட்டம் சேர்க்கப் படும் நிலை வந்தாலும் வரலாம். கல்வி அமைச்சு இதற்கு உடனடியாக ஒரு நிரந்தர தீர்வு காண வழி செய்ய வேண்டும்.

 

சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை பணி நீக்கம் அல்லது இட மாற்றம் செய்ய வேண்டும். இதனை கல்வி அமைச்சர் முகைதின் செய்வாரா?  அல்லது,  துணைக் கல்வி அமைச்சர் கமலநாதனை எப்பொழுதும் போல் பகடைக்காயாக்குவாரா?

 

“மிகுந்த இறை பக்தியுடைய ..காவின் இரு முழு அமைச்சர்களும் இதனை அமைச்சரை கூட்டதின் போது பேசி, பொது இடங்களில்  மிருகங்கள் பலி இடுவதற்கு நிரந்தரத் தடை காண  வழி செய்வார்களா?” என்று கேள்விகள் எழுப்பிய குலசேகரன், “இதற்கு நல்ல முடிவு  ஒன்றினை அரசாங்கம் காணத் தவறினால் நாடாளுமன்றத்தில் நிச்சயம் இது பற்றி மீண்டும் குரல் எழுப்புவேன்”, என்று அவர் மேலும் கூறினார்.

 

TAGS: