புனித ஹஜ்ஜுப் பெருநாள், முஸ்லீம்களின் தியாகத்தை வலியுருத்தும் திருநாள். அன்பையும் அரவணைப்பையும் மனித நேயத்தையும் விளக்குவது ஈகைப் பெருநாள். அப்படி அந்த புனிதத் தன்மை வாய்ந்த இஸ்லாத்தை களங்கப்படுத்தும் வண்ணம், இஸ்லாமிய நெறிகளை போதிக்கிறோம் என்று சொல்லி மிருக வதையை, பள்ளி வளாகத்தில் செய்திருப்பது பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறுகிறார் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.
இந்தியர்களை புண்படுத்தும் செயல்
அரசாங்கப் பள்ளிகளில் எல்லா இன, மத மாணவர்களும் பயில்கின்றார்கள். கற்றலும் கற்பித்தலும் நடைபெறும் பள்ளிக்கூடங்களில் அன்பு, மனித நேயம், இன ஒற்றுமை, நல்லிணக்கம், தேச பக்தி இவைகளையும் வலியுறுத்திப் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உயரிய இடத்தில், இஸ்லாமிய சமய மாணவர்கள் அவர்களின் மதச் சடங்குகளின் ஒன்றான பிராணிகளைப் பலியிடுதல் எப்படி என்பதனை விளக்குவதற்காக ஒரு பசுவினை, அதுவும் இந்துக்கள் தெய்வமாக மதிக்கும் ஒரு பிராணியை, அவர்கள் கல்விக்கூடத்திலேயே பலியிட்டிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று குலசேகரன் கூறுகிறார்.
“மூன்று இன மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்தில் பசுவை பலியிட அனுமதி கொடுத்த அந்த பள்ளி தலைமை ஆசிரியரின் செயாலானது மலேசியாவின் மூன்றவது பெரிய இனமான இந்தியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது”, என்று அவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.
இச்செயல் பள்ளி மாணவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி முஸ்லீம், முஸ்லீம் அல்லாத மணவர்களிடையே நிலவும் உறவை பாதிக்கச் செய்துவிட்டது என்பதை வலியுறுத்திய குலசேகரன், தேசியப் பள்ளிகள் மக்களின் முதல் தேர்வாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் கொக்கரிக்கும் இவ்வேளயில் இது போன்ற அருவருப்பான செயல்கள் பள்ளி வளாகங்களிலேயே நடைபெறுவது எவ்வாறு அந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவும் என்று அவர் வினவினார்.
குர்பானை அனுமதிக்கும் கல்விச் சட்டம் உண்டா?
“அதோடு, பிரதமர் முன்னெடுத்த ஒரே மலேசிய கொள்கைக்கு எதிராகவும் கூட இந்த மிருக பலி அமைந்துவிட்டது.
“மலேசிய அரசியல் சட்டத்தில் மற்ற இனங்களும் அவரவர் மதங்களை அச்சமின்றி பேணாலாம் என்கின்ற உத்தரவாதத்திற்கும் பங்கம் விளைவித்துவிட்டது.
“இஸ்லாத்தில் கட்டாயத்திற்கு இடமில்லை என்கின்ற தெளிவான கோட்பாடு இவ்விடத்தில் மீறப்பட்டுள்ளது என்பதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணருவார்களா?”, என்றவர் வினவினார்.
பள்ளி வாளாகத்தில் குர்பான் செய்யலாம் என்று எந்த கல்விச் சட்டத்தில் இருக்கிறது?
கல்வி அமைச்சின் ஏதாவது ஒரு சுற்றறிக்கையில் தேசியப்பள்ளிகளில் மிருகங்களை குர்பான் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதனை நான் கல்வி அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன் என்று குலசேகரன் மேலும் கூறினார்.
“இது போன்று 2007 இல் நாடாளுமன்ற வளாகத்தில் பசு துடிக்கத் துடிக்க பலியடப்பட்டபோது, அதைக் காண சகியாமல் எனக்கு வயிறு குமட்டி வாந்தியே வந்துவிட்டது. இதனை உடனடியாக நான் நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியபோது, அதற்கு அம்னோகாரர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் கூச்சலும் கிளம்பியது” என்பதை நினைவு கூர்ந்த குலசேகரன், “அன்றைய எனது விவாதத்தின் நியாயத்தை உணர்ந்த அப்போதைய மக்களவை தலைவர் நாடாளுமன்ற வளாகத்தில் இனிமேல் மிருக பலி கொடுக்கப்படாது என்று உறுதி மொழி வழங்கினார். அது இன்று வரையில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.
அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் உண்மையிலேயே எப்படி பிராணிகளை இஸ்லாமிய முறைப்படி குர்பான் செய்யலாம் என்பதை விளக்க விரும்பியிருந்தால், அதற்காக அப்பள்ளி மாணவர்களை அவர் பள்ளிவாசல்களுக்கு அழைத்துச் சென்று காட்டியிருக்கலாம் என்பதைச் சுட்டிக் காட்டிய குலசேகரன், “அவர் அப்படி செய்யாமல் மற்ற இன, மத மாணவர்கள் பயிலும் பள்ளியில் அதைச் செய்ததால் அவரின் மத வெறியைத்தான் மற்ற மாணவர்களுக்கு வெளிப்படுத்தினாரே தவிர அந்த மதத்தின் மகத்துவங்களை அல்ல. இப்படிப்பட்ட தலைமை ஆசிரியர் மேல் மாணவர்களுக்கு எப்படி மரியாதையும் நன்மதிப்பும் ஏற்படும் என்று அவர் மேலும் கூறினார்.
ஏன் முடியாது?
முகநூலில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் பொது மக்களில் ஒருவருக்கும் இடையில் நடைபெற்ற தொலை பேசி உரையாடலை தாமும் கேட்டதாகக் கூறிய குலசேகரன், அப்பொழுது, அந்த ஒருவர் கேட்ட நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அந்தத் தலைமை ஆசிரியர் தடுமாறியது வேடிக்கையாகவும் முட்டாள்தனமாகவும் இருந்தது என்றார்.
“நீங்கள் பசுவை குர்பான் கொடுத்தது போல வேறொருவர் பன்றியை உங்கள் பள்ளியில் குர்பான் செய்தால் நீங்கள் அனுமதிப்பீர்களா?”, என்ற கேள்விக்கு முடியாது என்று அழுத்தமாகப் பதில் சொன்ன அந்த தலைமை ஆசிரியர் அதற்கான காரணத்தை கேட்ட பொழுது பதில் சொல்ல முடியாமல் உளறினார்.
வர வர கல்விக்கூடங்கள் மத இன துவேஷங்களை எழுப்பும் இடமாக மாறி வருவதை இந்த சமுதாயம் கண்கூடாகக் கண்டு வருகிறது. அதுவும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவே இந்தத் துவேஷங்கள் எழுப்பப்படுகின்றன என்பது வேதனைக்குரியதாகும் என்பதை வலியுறுத்திய குலசேகரன், ஸ்ரீ பெஸ்தினா பள்ளியில் கழிவறை உணவறையாக மாறிய குளறுபடி முழுமையாக தீர்க்கப்படுவதற்குள் இப்படி இன்னொரு சம்பவம் நடந்திருப்பது மலாய்க்காரரல்லாத இனத்தினரை மிகவும் சங்கடமடைய வைக்கிறது என்றாரவர்.
பக்திமான்கள் செய்வார்களா?
“கல்வி அமைச்சு இவற்றை எல்லாம் முழுமையாக துடைத்தொழிக்க ஆக்ககரமாக செயலாற்றவில்லை என்பதனை இது காட்டுகின்றது. அல்லது, இது அராசாங்கத்தின் தூர நோக்கு திட்டத்தின் ஆரம்ப கட்டமோ என்று கூட மக்கள் சந்தேகிக்கும் வகையில் உள்ளது.
“போகிற போக்கை பார்த்தால் புதிய கல்வி உருமாற்று திட்டத்தில் பசுக்களை எப்படி குர்பான் செய்வது என்கின்ற பாடத்திட்டம் சேர்க்கப் படும் நிலை வந்தாலும் வரலாம். கல்வி அமைச்சு இதற்கு உடனடியாக ஒரு நிரந்தர தீர்வு காண வழி செய்ய வேண்டும்.
“சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை பணி நீக்கம் அல்லது இட மாற்றம் செய்ய வேண்டும். இதனை கல்வி அமைச்சர் முகைதின் செய்வாரா? அல்லது, துணைக் கல்வி அமைச்சர் கமலநாதனை எப்பொழுதும் போல் பகடைக்காயாக்குவாரா?
“மிகுந்த இறை பக்தியுடைய ம.இ.காவின் இரு முழு அமைச்சர்களும் இதனை அமைச்சரை கூட்டதின் போது பேசி, பொது இடங்களில் மிருகங்கள் பலி இடுவதற்கு நிரந்தரத் தடை காண வழி செய்வார்களா?” என்று கேள்விகள் எழுப்பிய குலசேகரன், “இதற்கு நல்ல முடிவு ஒன்றினை அரசாங்கம் காணத் தவறினால் நாடாளுமன்றத்தில் நிச்சயம் இது பற்றி மீண்டும் குரல் எழுப்புவேன்”, என்று அவர் மேலும் கூறினார்.
மிருகங்களை கழுத்தறுத்து புசிப்பது மானம் கேட்ட மனித குலத்துக்கு வாடிக்கையாகிவிட்டது…!!!
நாம் தொடை கிழிய கத்தினாலும் இவன்கள் வேண்டும் என்றே மீண்டும் செய்வான்கள். எதில் எல்லாம் மற்ற சமயத்தவர்கள் சம்பந்தபட்டிருக்கின்றனரோ அதில் எல்லாம் இவன்கள் நமக்கு வெறுப்பேற்ற வேண்டும் என்றே செய்வான்கள், இது காலம் காலாமாக நடக்கின்றது– பெரும்பான்மை இவன்களிடம் இருக்கின்ற அகங்காரம். MIC யும் MCA வும் வந்த வினை.
இது பள்ளிகளில் நடப்பது என்ன ஒழுக்கமோ தெரியவில்லை? வை பீ இதையும் ஆராயவும்.
ஒரு நல்ல கேள்வியை
ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கேட்டு இருப்பது வரவேற்கதக்கது. நான் வசிக்கும் (லோ கோஸ்ட் ஹவுஸ்) வசிபிடத்தில் கூட இப்படி ஒரு காரியத்தை செய்தார்கள். பள்ளி சிறுவர் முதல் பெரியோர் வரை அடுக்குமாடியில் இருந்து கொண்டு வேடிகைகை பார்த்தார்கள்.
ஒரு நல்ல
சமயத்திற்கு குர்பான் கொடுப்பது தவறு இல்லை. அதை
சிறு வயது மாணவர்களிடம் பார்க்க செய்வது மனம் சங்கடம் மக இருந்தது. இது போல் நம் மதத்திலும் இருக்கிறது. அதாவது ஆடுகளை நரபலி கொடுப்பது. நம் மதத்தில் குறிப்பாக 20 அல்லது 30 அடுகளால் கொடுகிறார்கள்.
இதையும். கண்டிக தக்கது.
இந்த மடையன்கள் நீரில் வாழும் மீன் இனங்களை எப்படி samaiyal பண்ணி சாபிடரான்கள் .விளக்க முடியுமா ????
அவர்கலாசும் மிருகங்களை அறுத்து உண்ணுகிறார்கள், ஆனால் நீங்கள் நடு ரோட்டில் தேங்காயை உடைத்து சாலையும் நாசம் பண்ணி தேங்காய் யாருக்கும் பயன் இல்லாமல் ஆகிவிடுகிறது. சிந்திங்க மக்கள் சிந்திங்க.
ஒரு பாவமும் அறியாத வாயில்லா ஜீவன்களை வதை செய்வதை விடுத்து, லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை குர்பான் செய்தால், நாடு உருப்படும், இதை கண்ணாரப் பார்க்கும் பள்ளிப் பிள்ளைகளும், ஒழுக்கத்தையும், நீதி, நேர்மையையும் கடைப்பிடிப்பார்கள். நான் நாடாளுமன்றத்தில் நுழைந்தேன் என்றால், கண்டிப்பாக இதைக் கேட்கிறேன்,
அவர்களாவது கடவுளிடம் வேண்டி மெதுவாக அறுக்கிறார்கள். நம் மக்கள்,காளி,முனிஸ்வரர்,மதுரை வீரன் கோயில்களில்,கிடாவை நிறுத்தி தலையில் மஞ்சள் தண்ணி தெளித்து,வாழை பழம் கீளே வைத்து,பழத்தை ஆடு சாப்பிடும் நேரத்தில் ,அந்த கேப்பில் நம்பிக்கை துரோகமாக தலையை துண்டாக்கி விடுகிறார்கள் ,இதை இந்து சங்கம் வர வேற்கிற மாதிரி தெரிகிறது.இந்து மதம் சரியா ?
அசாமி உங்கள் கருத்துக்கு எங்கள் இயக்கம் உடன் படுகிறது. youtube ல் கூட அண்மையில் நீங்கள் கூர்வது போல் உள்ள சம்பவம் ஒரு காணொளி பார்த்தோம், பார்த்தவுடன் மனது பத பதைத்து விட்டது, என்ன ஒரு காட்டு மிராண்டி தனம்.
Suyamariyathai iyakkam அவர்களே! முதலில் உங்களுக்கு அந்த மரியாதையை இருக்கிறதா என்று பாருங்கள். தேங்ககைக்கும் பசுவுக்கும் ஒப்பிட்டு பேசுவது சரியா? ஒரு வாயில்லாத பெரியமிருகத்தை கட்டிபோட்டு, துடிதுடிக்க கழுத்தை அறுப்பது சரி என்று சொல்லுகிறிர்களா? அதை நம் இன மாணவர்கள் பார்க்க வேண்டும்? என்ன கொடுமை இது! உங்களை போன்று ஆள் இருந்தால் இன்னும் என்னனவோ செய்வானுங்க. முருகா ஏன் இதையெல்லாம் பார்த்து கொண்டுயிருக்கிறாய். .
அவர்களின் சமய உரிமைகளில் நீங்கள் மூக்கை நுலைக்கிறீர்கள். பள்ளிகளை காட்டிலும் உயர்வான புனிதமான ஆலயங்களில் நம்மவர்களும் உயிர்பலி கொடுக்கிறார்கள். உங்கள் நண்பர், முன்னால்- காப்பார் மாணிக்கவாசகம் அப்படிப்பட்ட கோவில்களுக்குத்தான் முதலிடம் தருவார். உங்கள் சீன நண்பர்களும், ஏன் உங்கள் சிரம்பான் சட்டமன்ற உறுப்பினர் குணவும், இந்த ஆலயங்களுக்குத்தான் கண்டிப்பாக வருகை தருவார்கள். முடிந்தால் கொடாவை திருடிக்கொண்டுப்போய் கோவிலில் வெட்டுபவன் கூட உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பின……..யார்…….சிராம்பான் போலிஸை கேளுங்கள் சொல்லுவார்கள்.
எதற்கு நம் இன மாணவர்களை தமிழ் பள்ளிக்கு அனுப்பமால் அவனது பள்ளிக்கு அனுப்பவேண்டும்?இன்று அது சரியில்லை இது சரியில்லை என புலம்பவது…இது தேவையா???
அய்யா அசாமி அவர்களே உன்னை போல உள்ள தமிழன் புல்லுருவிகள் எதற்கு எதை முடிச்சு போடுகிறாய் மடையா, த்ரோகி, நி தமிழனாக இருக்க அருகதை அற்றவன் போய் தோலை வெட்டிக்கோ ….
நமக்குள் வோட்ருமை வேணும்,நம்மை இழிவு படுத்த வெளியே இருந்து வரவேணாம்,கேவலம் 3.எப்போது மத/இன வுணர்வு வரும்.அவன் காணாத ஒன்றை காட்டி தெரியுதா என்று கேட்டால் மற்றவர் அமாம் தெரியுது பெருசா தெரியுது சொல்வான்.அவன் எங்கே நாம் எங்கே.மாட்டிறைச்சி அதிகளவு இந்திய நாடு அனுப்புது.ஆஸ்ட்ரேலிய நாட்டில் மாடு அறுப்பு கொட்டகையில் தான் அறுக்க வேணும்.அறுத்து சாப்பிடு ஆனால் பொது இடம் வேணாம் தான் சொல்றோம்.நம் தெய்வமாக கருதும் பசு நம் முன் அறுத்து கொள்ளவேணாம் சொல்றோம்.இதுக்கு போய் நம் வழிபடும் கோயில்/தெய்வம் வீதிக்கு இலுக்காதேய் நாம் மீன்/இரிசி மற்றும்2 மார்கெட்லே வாங்கறோம்.நம்மில் நிறைய பேர் பன்றி சாபிடுராங்க்கோ,ஆனா பொதுவில் வெட்டி சமைக்க இல்லே.நாம் சிறுபான்மை மக்கள் நம்மை இவர்கள் இப்படி அசிங்க படுத்த கூடாது.இது என் கருது.
நன்றாக கேளுங்கள்.மிருகங்களை தெய்வங்களுக்கு பலியிடுவது மூடத்தனம் என்பதை எப்பொழுது உணரப்போகிறார்கள்.மனிதன்
கடவுளின் பெயரைச்சொல்லி மிருகங்களை உண்கிறான்.கடவுள் இவர்களை மன்னிப்பாரா?
மலாய்காரன் அவனது பள்ளியில் மாடு வெட்டுவான்,சீனன் அவனது பள்ளியில் பன்றி வெட்டுவான்,நமக்கு அதை தட்டி கேட்க உரிமை இல்லை.காரணம் அது அவர்களின் பள்ளிக்கூடம் ,நமக்கு என்று தமிழ்பள்ளிகள் உள்ளதே,நம் பிள்ளைகளை அதில் படிக்கவைப்போம்…
எம்மதமும் சம்மதம்
குலசேகரன் போன்றவர்களின் பேச்சு மிக வேதனைகுறியது இவனை போன்றவர்களின் பேச்சு மத நல்லினக்க்த்தை குழி தோன்றி புதைக்கின்றது குருடன் குலசேகரா பத்துமலையில் போய் பார் அப்புறம் தெரியும் உனக்கு.
புனித ஹாச் பெருநாளில் மசூதிகளில் குர்பான் செய்யும் சடங்கு நீண்ட நாட்களாகவே நடந்து வருகிறது. ஆனால் பள்ளிகளில் நடைபெற்றதில்லை அப்படி இனியும் பள்ளிகளில் இதுப் போன்ற சம்பவங்கள் நடைப் பெருமானால் அவர்களுக்கு அழிவு காலம் நெருங்குகிறது என்பது உண்மை! கல்வி பயிலும் இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைப் பெறுவதை எப்படி மட சமய போர்தகர்கள் இடம் கொடுத்தார்கள்?
குலசேகரனின் மதவாத பேச்சு மலேசியா வாழும் தமிழ்ர்களுக்கு ஆபத்து தமிழ்ர்களுக்கு இவன் தான் முதல் எதிரி. உலகத்திலே எங்கும் இல்லாத அளவிற்க்கு உயரமான கோவில் பத்துமலையில் தான் உள்ளது. முட்டாள் குலசேகரனுக்கு ஏன் புரியவில்லை மத நல்லினக்கம் பேணபடும் மலேசியாவில் முட்டாள் குலசேகரனின் பேச்சு மிக ஆபத்தானது.
நம்முடைய தைபுச திருவிழாவில் நாம் இந்து மக்கள் ஆடும்
ஆட்டத்தை யார் கண்டிப்பது ? இதை விட கேவலம் ஏதும் உண்டா?
பக்தி என்ற பெயரில் இந்து மதத்தை கேவேலபடுத்தும் இந்துக்களை
யார் தட்டி கேப்பது? மற்ற மதத்தின் வழிபாட்டினை குறை கூரெ வெண்டாம். நமக்குதான் ஆபத்து !!!!!!!!
ஒரு பள்ளி வளாகத்தில் குர்பான் செய்தது தவறுதான். ஆனால் நாம் மட்டும் ஆடு கோழி போன்ற வாயில்லா பிராணிகளிடம் கருணை காட்டினோமா என்ன? புனிதமாக போற்றப் பட வேண்டிய கோவில் வளாகத்திலேயே காலம் காலமாக நாம் செய்த உயிர் வதைகள் எவ்வளவோ. அது இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது? அதையும் பிள்ளைக் குட்டிகள் குடும்ப சமேதராய் சென்று பார்த்தும் வருகிறோம்? என்ன கொடுமை சார்?
நண்பர்களே, பள்ளிகூடத்தில் பலி இட்டது கட்டாயமாக தவறு, காரணம் இதை போல வேறு இனத்தவர் அவர்களின் விருப்ப உணவான பன்றியை பள்ளிகூடம் வரை கொண்டு வந்தால் பல பிரச்சனைகளை கொண்டு வரும். மேலும், இது போன்ற நிகழ்வுகளை, சமயம் சார்ந்த இடங்களில் நிகழ்த்துவது சிறப்பு. நாம் இங்கே கருத்து சொல்ல வேண்டியது, அவர்கள் இதை பள்ளி கூடத்தில் செய்ததை பற்றி மட்டுமே.. மாறாக, அவர்கள் பலி இடும் நம்பிக்கை அவர்களின் மதம் சார்ந்தது.. அதை இடித்துரைக்க, நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஒவ்வொரு முறையும், அவர்களில் சிலர் நம் மதத்தை இழிவு படுத்தி பேசும் பொழுதில், நமக்கு கோபம் வருகிறது. இன்று நாம் அதையே திரும்ப செய்யலாமா?
சற்று சிந்தித்து பார்ப்போம். இந்துக்கள் சைவம் இருப்பதின் காரணம், உயிர் கொல்லாமை ஆகும். எனது மலாய் நண்பர் ஒருவர் என்னிடம் வினவினார், ஏன் நீங்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை என்று.. நான் சொன்னேன், மாடு இந்தியர்களின் உளவு தொழிலுக்கு உதவி செய்தது, தாய் பாலுக்கு அடுத்த படியாக, பசும் பாலையே குடிக்கிறோம், ஆகா அது அம்மா போன்றது, அதன் காரணமாகவே, அதை நாங்கள் தெய்வமாக பார்க்கிறோம், அதனால்தான் சாப்பிடுவதில்லை என்று. நீண்ட விளக்கம் கொடுத்த திருப்தி எனக்கு. இப்பொழுது அவர் மறு கேள்வி கேட்டார். ஒருவன் உன் அம்மாவை வெட்டி சாப்பிட போகிறான் என்று தெரிந்து, அவனுக்கு உன் அம்மாவை விற்று பணம் பெற்று கொள்வீர்களா? அப்படியானால், நீங்கள் தெய்வமாகவோ, அம்மாவாகவோ மதிக்கும் அந்த பசுவை பெரும்பாலும் வளர்த்து விற்பவர்கள் இந்தியர்கள் தானே? என்றார். இது எந்த வகை உயிர் கொல்லாமை? என்றார். என் முகத்தில் ஈ ஆட வில்லை.பிறகுதான் நான் இதை பற்றி ஆழ்ந்து யோசித்தேன். இஸ்லாமிய மதம் பசுமையான இந்தியாவில் தோன்றவில்லை. பாலை நிலமான அரபு நாட்டில் தோன்றியது. அங்கே அவர்கள் விவசாயம் செய்து, சைவத்தை போற்ற வழி இல்லை. கால்நடை வளர்ப்புதான் அவர்களின் பிரதான தொழில். கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பார்கள். உணவுக்காக ஒரு உயிரை கொள்வதற்கு முன், கடவுளிடம் அனுமதி பெற்றே அறுத்து சாப்பிடுகிறார்கள். அப்படி உணவுக்காக அனுமதி பெறாத அறுப்பை அவர்களின் மதம் ஏற்று கொள்வதில்லை. இதனால், உணவை தவிர்த்து மற்ற கொலைகள் தடுக்க படுகிறது. இது எவ்வளவோ மேலான விசயமே. ஆனால் சைவம் சாப்பிட வேண்டிய நாம், இறைச்சி வகைகளை தின்று கொழுக்கிறோம். இதையெல்லாம் யார் கேட்பது? அடுத்தவர் மதத்தில் கருத்து சொல்ல போனால் நாம் மானம் இழக்க நேரிடும். அது யாராக இருந்தாலும் சரி. பலி இடும் வழக்கம் தமிழரிடதிலும் இன்றும் இருக்கிறது..
குலஸ்ர்கர உனக்கு இங்கு இந்தியர்கள் நிம்மதியாக வாழ பிடிக்கவில்லையா , துவேசத்தை கிளப்பி நாட்டில் கலவரத்தை பரப்ப போகிறாயா ,நானும் தான் அந்த தலைமை ஆசிரருக்கும் நம்மவருக்கும் நடந்த உரையாடலை கேட்டேன் , அந்த ஆசிரியர் எந்த அளவு பொறுமையாக பதில் சொன்னார் ,ஆனால் நம்மவரோ மிகவும் ஆக்ரோசமாக பேசினார், ஆனால் அதை மலாய் இனைய தளங்கள் வெளியிட்டபோது அந்த மக்களின் கோபத்தை நீங்கள் கண்டீரா, அதில் பலபேர் ஒரே மாதிரியான கேள்வியைத்தான் கேட்கிறார்கள் தைபூசதையும் அதன் ஊர்வலத்தையும் தான்…பொது இடத்தில பொதுரோடில் எந்த அளவோக்கு இடைஞ்சல் நாங்கள் ஈற்றுக்கொள்ள வில்லையா என்று கேட்கிறார்கள் ….
INDIAN TAMILAN ANONYMOUS உங்கள் 3 பேருக்கும் மதி பத்தாது. குலா என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட உங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவர் முஸ்லிம்களை மாடு சாப்பிட குடாது என்று சொல்லவில்லை.பள்ளிகூடம் என்பது கல்வி போதிக்கும் ஒரு இடம்.மிருக வதை செய்யும் இடம் இல்லை.பள்ளிவாசல்களில் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளுங்கள். பள்ளி ஒரு பொது இடம். நமது உரிமைகாக அவர் குரல் கொடுக்கிறார் .அதையும் நீங்கள் குறை சொல்கிறிர்கள்.நீங்கள் எல்லாம் மதம் மாறி அவர்கள் சொல்வதை,செய்வதை எல்லாம் ஏற்றுகொள்ளுங்கள் .
முட்டாள் குலசேகரன் மன நல்லினக்ததை குழி தோன்றி புதைக்கின்றான்.இவனிடமிருந்து தமிழ்ர்களை பத்துமலை முருகன் தான் காப்பாற்ற வேண்டும்.
நான் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில், (1969) இரு ஏழை சீன மாணவிகள் (இருவரும் சகோதரிகள்) எப்பொழுதும் போல் வீட்டில் சமைத்து கொண்டுவந்த உணவில் சக மாணவியர் பன்றி இறைச்சி இருப்பதைக் கண்டு ஒரு பெரிய களேபரமே ஆயிற்று.. அந்த இரு சீன மாணவியரையும் public assemblyயில் முன் வைத்து முஸ்லிம் அல்லாத மற்ற மாணவர்களுக்கு ஒரு நீண்ட விரிவுரையே நடத்தினார் தலைமை ஆசிரியர். விவரமான தலைமை ஆசிரியர். எந்த அவச் சொல்லுக்கும் ஆளாகாமல் இருக்க, கூடவே எல்லா இனத்தையும் பிரதிநிதித்த பள்ளி ஆளுநர்களை கூட்டத்திற்கு அழைத்திருந்தார். அவர் தலை தப்பியது.
விடுமுறை நாளில் தானே அவர்கள் குர்பான் கொடுகிறார்கள், அதுஊம் காலம் காலமாக தானே நடக்கிறது இப்போது ஏன் இந்த கடுமையான அறிக்கை , ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது நாட்டில் உள்ள கொஞ்சம் மிதவாத மலாய் காரர்களையும் இவரைப்போன்றவர்கள் மாற்றிவிடுவார்களோ ….விடுமுறை நாளில் நம் பிள்ளைகள் அங்கு செல்வதற்கு வாய்ப்பில்லை பிறகு எதற்கு இந்த துவேச அறிக்கை ….எனகென்னவோ இது நல்லபடவே இல்லை ,உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நம் மக்களை பலிகடா ஆகாதிர்கள்…
ராஜன் , நமது உரிமைகளை தான் அவர் கேட்கிறார் , ஆனால் அது அடுத்தவரின் அதுஊம் அடுத்தவரின் வழிபாட்டு உரிமை ,பாதிக்கப்படுவது உங்களுக்கு புரியவில்லையா…
இன்று பள்ளியில் பலிகொடுப்பான் நாளை கணவன் மனைவி எப்படி உறவு கொள்வது என்று செய்து காட்டுவன் தலைமை ஆசிரியர். அதற்கு கல்வியமைச்சு உத்தரவு கொடுக்கும்.
ராஜன் குலசேகரன் போன்றவர்கள் இப்படி தான் பிட் போட்டு நம்மையும் மற்ற மததினவர்களையும் பிரித்து விடுவார்கள் ஒட்டுக்காக இவர்கள் எதையும் பேசுவார்கள் இவன் உண்மையான் ஆன்பிள்ளையாக இருந்த்தால் நிக் அஜிஸ், அன்வார் இப்றாஹிம் யிடம் போய் பேசுவார்களா?
குலா அவர்கள் தைரியமாக குரல் கொடுக்கிறார்! அதை பாராட்ட மனம் இல்லை என்றலும் குறை சொல்லாதிர்கள். பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும் என்றால் எப்படியும் வாழாலாம்.பேசாமல் நீங்கள் மதம் மாறிவிடுங்கள்.அவர்களை மாடு வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. பள்ளிகுடங்களில் செய்யாதிர்கள் என்று தானே சொல்கிறார் . எதில் என்ன தவறு இருக்கிறது ? நாளைக்கு ஒரு சட்டம் போட்டு நீங்கள் எல்லாம் இஸ்லாம் முக்கு மாறிவிட வேண்டும் என்று சொன்னால் , அப்போதும் பேசாமல் வாய்முடி மௌனமாக இருக்க வேண்டுமா ?
அம்மா
அய்யா தமிழன் என்பவன் பல மதங்களை ஏற்று கொன்றுகிறான் ஆகவே பொறுத்து போங்க எல்லாம் சரியாய் போய்விடும்.பள்ளி கூட வளாகத்தில் கொர்பான் செய்தது சரி இல்லைதான்
மாடு வெட்டி நமக்கு கடுப்பை எத்தி ஓயாங் காட்டுவது சில முட்டாளுக்கு புரியவில்லை ! மத நல் இணக்கமா ? ஏண்டா நீ மலேசியாவில் தானே இருக்கிறாய் ? புண்ணாக்கு என்ன நடக்குதுன்னு தெரியாதா வெண்ண ?
இங்குக் கூறப்பட்ட கருத்துகளை வைத்துப்பார்க்கும் போது, பெரும்பாலான நம் தமிழனுக்குச் சிந்திக்கத் தெரியவில்லை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டள்ளது!
பள்ளி கூடத்தில் மிருக வதை சரியா தவற?
ஒரு தலைவரும் இதைபற்றி மூச்சு விடலை பாத்தீங்களா…எல்லாம் ஜால்ரா கூட்டம்! நல்லா யோசிச்சுப்பார்க்கனும் , கல்வி கூடத்திலே மாட்டை அறுப்பது தவறு. பல்லின மாணவர்கள் இருக்கும் இடத்துலே மாட்டை அறுப்பதே பன்றியை அறுப்பதோ தவறு. அருப்பதற்குதான் ஷ்பெசியலா இடம் இருக்கே ! நம்ப கிட்ட உள்ள பெரிய பிரச்சனையில் ஒன்று….நம்ப ஆளுங்க ‘என சொல்றாங்கன்னு யோசிக்கிற ஆள் இல்லே , யாரு சொல்றாங்கன்னுதான் பார்க்குறாங்க. ஆளுங்கட்சி ‘வெண்ணையிலே நாங்க பெட்ரோல்’ எடுப்போம்னா , காலையிலே நாலு மனிக்கல்லாம் வாலியை தூக்கிட்டு ஓடுற ஜால்ரா கூட்டமா மாறிகிட்டு இருக்கு. யாரு சொல்றாங்கன்னு பார்க்காம , என்ன சொல்றாங்கன்னு கேட்கிற , யோசிக்கிற கூட்டமா மாறனும். இல்லேன்னா மாத்திடுவோம் சரியா?
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் …இங்க யாரும் முட்டாள் இல்லே , குலா முட்டாள்னா… பழனியும் முட்டாள்தான், சுப்பிரமணியமும் முட்டாள்தான், குவான் எங்கும் முட்டாள்தான், அன்வாரும் முட்டாள்தான், நம்பா நம்பிக்கை நட்சத்திரமும் முட்டாள்தான்! இந்த முட்டல்களைஎல்லாம் பொருக்கி எடுத்து தேர்தல்லே ஜெயிக்க வச்ச முட்டாளு யாருங்கோ ?!!!
பலி கொடுப்பது தவறு அதையும் மாணவர்கள் முன் கொடுப்பது மிகவும் தவறு, பள்ளியில மோரல் பாடம் சொல்லி கொடூத்திட்டு பசுவை பலி கொடுப்பது எங்க நியாயம். என் இவ்வளவு பிரசனை ஒழுங்க உங்க பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பி இருந்தா இந்தா பிரசனை வருமா ?????????
இப்பகுதியில் ஒரு சில இந்திய முஸ்லிம் அன்பர்களும் புனைப்பெயரில் கருத்து எழுதுவதாக தெரிகின்றது. குலா எழுப்பியது மதப் பிரச்சனை அல்ல மாறாக சமூக பிரச்சனை. எதை எங்கே செய்ய வேண்டுமோ அதை அங்கே செய்தால்தான் மதிப்பு. மாறாக, வேறு இடமே கிடைக்காதது போல் பள்ளிக்கூட வளாகங்களில் மிருக கொலை சித்திரவதை என்பதெல்லாம் விலக்கப்பட வேண்டியவை. இதை செய்யாதே என்றால், அதை ஏன் செய்கின்றாய் என்பதெல்லாம் விதண்டாவாதப்
பேச்சு.
INDIAN, thamilan, anonymous, malaysian போன்றவர்களின் கருத்து, மாட்டுக்கறி சாப்பிட்டாலும் பரவாயில்லை, பன்றிக்கறி சாப்பிட்டாலும் பரவாயில்லை நான் தமிழன், தமிழனே என்று வாதிடும் சமயம் பண்பாடு என்ற இரண்டையும் தொலைத்துவிட்டு வேறு இனத்திற்குள் புக முடியாமலும், அங்கிருந்து விரட்டப்படும் தமிழனுக்குத் தகும். ஆனால், சுயமரியாதை, தன்மானம் உள்ள சுத்த தமிழனுக்குத் தகாது.
Anti Guruji, “ஒருவன் உன் அம்மாவை வெட்டி சாப்பிட போகிறான் என்று தெரிந்து, அவனுக்கு உன் அம்மாவை விற்று பணம் பெற்று கொள்வீர்களா?” என்று கேள்வி கேட்டவனுக்கு இப்படி பதில் சொல்லுங்கள். ஒருவன் அவ்வாறு தெரிந்து அத்தகைய ஈனச் செயலை செய்வானால், அதற்க்கு எம்மதத்தில் வினைபயன் உண்டு என்று சொல்லுங்கள். ஒரு பிராமண வாலிபன் அழகிய தன் தாயையே புனைந்த ஊழ்வினைப் பயனால் பட்ட துன்பத்தை சிவா பெருமானிடமே முறையிட்டு அழுது பாவ விமோச்சனம் கேட்டு, அவனுக்கு மனமிறங்கி அவன் பாவ விமோச்சனத்துக்கு வழியைக் கூறி விட்டு மறைந்த திருவிளையாடல் புராணமும் உண்டு. ஆகையால் எங்களின் மதத்தில் நல்வினைக்கும், தீவினைக்கும் அதற்கேற்றாற்போல் வினைப்பயன் உண்டு என்று பிற மதத்தவரிடம் எடுத்துக் கூறுங்கள்.
முட்டாள்களுக்கு என்ன சொல்வதெல்லாம் புரியவில்லை.குலசேகரன் மலேசியாவின் நல் தோன்றத்தை குழி தோன்றுகின்றார்கள் என்பது உண்மை.
தேனீ கூறிய இவன்கள் எல்லாம் MIC யுடன் சேர்ந்த ஊம்பிகள். இவன்களுக்கு சூடு சொரணை ஏதுவும் கிடையாது.ஊம்பி ஊம்பியே மழுங்கிய ஜென்மங்கள்.
“nanvan”, முட்டாள் என்று உங்களை நீங்களே சொல்லிக்கொள்வதில் தப்பேதும் இருக்க முடியாது.
அன்பு தமிழ்க் குடி மக்களே !ஏன் இவ்வளவு குழப்பம்! குலா சொன்னது ,பொது இடங்களில் மிருகத்தைக் கொல்லாதே என்பதுதான். அது பள்ளியில் மாட்டை வெட்டினாலும், ஆலயத்தில் ஆட்டை வெட்டினாலும் பொருந்தும். வித்தியாசம் என்ன வென்றால் ஆடு வெட்டும்பொழுது பெரும்பாலும் இந்துக்கள்தான் அதைப் பார்ப்பார்கள். இருந்தாலும் இவை இரண்டுமே தவறுதான்.இந்துமதம் என்றுமே மிருக வதையை ஆதரித்ததில்லை .இவைகளை சிறு தெய்வ வழிபாடுகள் என்றுமட்டும் இப்போதைக்கு வைத்துக்கொள்ளலாம் . ஆனால் பள்ளியில் மாடு வெட்டுவது , அதுவும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்று காரணம் சொல்லுவது அவர்களின் அறியாமையையும் நாகரீக வளர்ச்சி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதத்தான் காட்டுகிறது. அதைதான் தவறு என்று குலா தெளிவு படுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்.
சைவம்
மூஸ்லிம்கள் பசுவதை செய்யவில்லை அவர்கள் தங்களின் கடமையை தங்களின் கடவுளுக்காக செய்கின்றார் இதை நாம் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள் வேண்டும்.அதை தவிர்த்து அதை குறைகூறி கூறுவது நம்க்கு அழகல்ல, நன்றாக குலசேகரன் போன்றவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும், ஏன் தீபாவளி நாட்க்ளில் நாம் பட்டாசு வெடிக்கின்றோம் யாரவது எதிர்க்கின்றார்களா. தீபாவாளி நாட்களுக்காக நிறைய தீபாவளி கடைகள் நிறைய திறக்கின்றார்கள் இதை யாரவது எதிர்க்கின்றார்களா? நமது கோவில்க்ளுக்கு அருகில் பள்ளி வாசல் இருக்கின்றது அக்கம் பக்கம் உள்ள்வர்கள் மனித நேயத்துடன் தான் இருந்துவருகின்றார்க்ள். ஆனால் குலசேக்ரன் போன்ற குணம் இல்லாதவர்கள் தான் பிரச்சனை ஏறபடுகின்றது தமிழ்ன சொன்னது போல் நிக் அஜிஸ், அன்வார் இபுறாஹிம் போன்றவர்க்ளிடம் பேச தைரியகம் இருக்கின்றாதா?
ராஜன் என்ற போர்வையில் மறைந்துக் கொண்டு அம்பு வீசும் அன்பரே, குலசேகரன் கூற வந்தது பள்ளியில் அக்கொலையைச் செய்ய வேண்டாம் என்பதுதான். ஒரு மசூதி வளாகத்தில் செய்தால் அது உங்கள் வீட்டுப் பிரச்சனை. மாற்றான் வந்து அங்கே மதி புகுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. பட்டாசு வெடிப்பதும், தீபாவளி கடை போடுவதும் மற்றவர்களுக்கு பெரிய சகிப்புத் தன்மை எனில், ஹாரிராயாவுக்கு வெடிக்கும் பட்டாசு சத்தத்தையும், பள்ளிவாசல்கள் மற்றும் ‘surau’ -க்களில் இருந்து வரும் இடி ஓசைகளையும் தாங்கிக் கொண்டு, வெள்ளிகிழமைகளில் கண்டபடி வாகனங்களை நிறுத்தி வைத்து சாலை மறியல்களை ஏற்படுத்துவதை மற்றவர்கள் பொறுத்துப் போவதும் அதை விட பெரிய சகிப்புத் தன்மையே என்பதை நீங்கள் அறியாமல் போனது ஏனோ