நேற்று அம்னோ உதவித் தலைவர் தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்ற அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, தம் வெற்றிக்கு எதிரணியை ஆதரிக்கும் சமூக ஊடகங்கள்தாம் காரணம் என்கிறார்.
“அந்த வலைத்தளங்களுக்கும் இதழ்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
“உண்மையில், அவைதாம் நான் பேரும் புகழும் பெற உதவின”, என்றவர் கூறியதாக ஸ்டார் ஆன்லைன் அறிவித்துள்ளது.
“என்னைப் பற்றிய செய்திகளுக்கு இடமளித்ததற்காக அவர்கள் வருத்தப்படக் கூடாது. அதுதான் அம்னோ அரசியலில் எனக்கு நன்மையாக அமைந்தது”, என்றாரவர்.
உதவித் தலைவர் தேர்தலில் ஹமிடி 185 வாக்குகளும், ஷாபி அப்டால் 174 வாக்குகளும் ஹிசாமுடின் உசேன் 100 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்காகத்தானே அல்லஹ் என்ற வார்த்தையை கையில் எடுத்தீர்கள்.
இது உனக்கு தற்காலிக வெற்றிதான் ,வீண் அகம்பாவம் வேண்டாம் . உன்னை போன்ற இனவெறி பிடித்த பல தலைவர்களை அம்னோவில் பார்த்து விட்டோம். அவர்களெல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். பல்லின சமுதாயத்திற்கு நீ தலைவனாக அருகதையற்றவன். பெரும்பான்மை மலாய்க்காரர்கள் உன்னை ஆதரிக்க மாட்டார்கள்.விரைவில் உனக்கு முடிவு கட்டுவார்கள்,அதுவரை ஆடு மகனே ஆடு !