அம்னோ உதவித் தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர்கள் மூவருமே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளுக்காக கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார்.
“அதன்வழி அரசாங்கத்தில் தாங்கள் தொடர்ச்சியை விரும்புவதை அடிநிலை பேராளர்கள் உணர்த்தியுள்ளனர்.
“என்னைப் பொறுத்தவரை, அதை அம்னோவை வலுப்படுத்தும் அவர்களின் பங்களிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்”, என கைரி குறிப்பிட்டார்.
நேற்றைய அம்னோ உதவித் தலைவர் தேர்தலில் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஷாபி அப்டால், ஹிசாமுடின் உசேன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர்