விபத்துக்களின் போது கைகளை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்று அடிப்படையில் அறுவைசிகிச்சை மேற்கொண்டு கைகளை பொருத்தும் அதி நவீன முறை ஒன்றை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் குறித்த இலங்கை விஞ்ஞானி இந்த ஆய்வினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.
வைத்திய கலாநிதி துசித ஜயமான என்ற மருத்துவ விஞ்ஞானியின் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
எலிகளைக் கொண்டு கை உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பேர்ண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அநேகமாக கை உறுப்பு மாற்று சிகிச்சையின் போது ஏற்படும் பிரதான சிக்கலான நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமையை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நவீன முறைமையின் மூலம் மீளப் பொருத்தப்படும் கையின் நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமையுடன் இயைபொத்து தொழிற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித குலத்துக்கு ஒரு நல்ல காரியம். துசித கஜனாயகே உங்களுக்கு எனது வாழ்த்துகள்!