பிபிஸி வெளியிட்டுள்ள செய்தியால் இலங்கை அரசு கடுப்பில்…!- திவயின தகவல் – காணொளி குறித்து விசாரணை

bbc_reporterஇலங்கை  தொடர்பில் பி.பி.ஸி யில் ஒளிபரப்பான செய்தி ஒன்று குறித்து  கடுப்பாகியுள்ள இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் தமிழ் பெண்கள் படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் தமிழ் பெண்ணொருவர் தெரிவித்திருந்த கருத்தொன்றினை பி.பி.ஸி ஒலிபரப்பியிருந்தமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக திவயின தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகள் மகாநாடு நடைபெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் இவ்வாறான தவறான செய்திகளை பி.பி.ஸி. ஒளிபரப்பி வருகிறது.

பிரித்தானியாவிலிருந்து  இலங்கை வந்துள்ள பி.பி.ஸி யின் ஊடகவியலாளர் ஒருவர் வட மாகாணத்துக்குச் சென்று தவறான தகவல்களை அனுப்பி வைக்கிறார் என்று தெரிய வருவதாகவும்  திவயின தெரிவித்துள்ளது.

பி.பி.ஸி காணொளி குறித்து விசாரணை

வடக்கில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக வெளியான பி.பி.ஸி காணொளி குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பெண்களை இராணுவத்தினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக காணொளியில் விபரிக்கப்பட்டிருந்த்து.

பி.பி.ஸி ஊடகம் மிகவும் திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி இந்த போலிச் செய்திகளை வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினர் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

லண்டலிருந்து இலங்கை சென்றுள்ள பர்காய் கீனன் என்ற பிபிஸி செய்தியாளர் போலித் தகவல்களை திரட்டி இவ்வாறு காணொளி வெளியிட்டுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: