பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அரசிடமிருந்து அழைப்புக் கிடைக்குமாயின் அதில் கலந்து கொள்வதா இல்லையா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று யாழ்ப்பாணத்தில் மந்திராலோசனை நடத்தியுள்ளனர்.
இருப்பினும் இது தொடர்பில் எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.
இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், பொதுநலவாய மகாநாடு போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தினை விரைவில் கொழும்பில் நடத்துவது என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டது.
கோமன் வெல்த் மாநாடு அன்று வட மாநில தமிழர்கள் தனியாக ஒரு மாநாடு நடத்தி மக்கள் தேவைகளை பதிவு செய்ய வேண்டும்.
கோமன் வெல்த் மாநாட்டில் வட மாநில தலைவர்கள் கலந்து கொண்டால் இதை விட மானக்கேடு ஒன்றும் இருக்க முடியாது. உலகத தமிழர்கள் எல்லாத்தையும் மூடிக்கிட்டு இனி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் .தமிழக திருவிட திருட்டு பரிதேசிகளுக்கும் இனி தமிழ் ஈழம் அரசியல் வேட்டை இருக்காது.அப்படி கலந்து கொள்வார்களே ஆனால் இனி இவர்கள் தங்களை ஜபானா என்ற தம் ஆதி நிலைக்கு போகட்டும்.தமிழர்கள் ஈழ தமிழ்கள் என்று தமிழா இனத்தை கேவலப்படுத்த வேண்டாம்.