பொதுநலவாய மாநாட்டுக்கு எதிராக மூன்று சர்வதேச சக்திகள் பிரசாரம்! அரச தலைவர்களுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு

commonwealth_nation_flagsபொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு எதிராக மூன்று சர்வதேச சக்திகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டுக்குள் இருந்து கொண்டு இவ்வாறு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் மத அமைப்புக்களின் ஊடாக இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மன்னார் ஆயர்களினால் உருவாக்கப்பட்டுள்ள பிரஜைகள் கமிட்டியினால் காணாமல் போனோர் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும், இது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைகளுக்கு அமைய இவ்வாறு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் அச்செய்தியில் குறிப்பிடப்ப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்களின் ஊடாக, இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரவதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச தலைவர்களுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

அரச தலைவர்களின் பிரத்தியேக பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர்கள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் பயணம் செய்யும் வீதிகளை பாதுகாக்கும் பொறுப்பு அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரச தலைவரின் பாதுகாப்பிற்கும் இராணுவ கேர்ணல் நிலை வகிக்கும் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மிக மிக முக்கியமான அரச தலைவர்களின் பிரத்தியேக பாதுகாப்பு பணிகளுக்கு கமாண்டோ நிலை வகிகுக்கும் இராணுவ உயரதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

TAGS: