வடக்கு மாகாண மக்களின் எதிர்ப்பார்ப்பை இந்தியா நிறைவேற்றும்: சல்மான் குர்ஸித்

kurshith_001இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் இந்தியா, இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித் இந்த கருத்தை நேற்று வெளிப்படுத்தியுள்ளார்

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முடிவுகளை எடுக்கவில்லை. எனினும் வெளிநாட்டமைச்சர் என்ற அடிப்படையில் தாம் இலங்கை மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக குர்ஸித் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் இந்தியா தொடர்பில் அதிக எதிர்ப்பார்ப்புக்களை கொண்டிருக்கின்றனர். எனவே இந்தியா அவர்களின் பக்கம் சார்ந்த முடிவையே எடுக்கும் என்று சல்மான் குறிப்பிட்டார்.

கடுமையான பிரயத்தனங்களுக்கு மத்திலேயே வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண மக்கள் முதலமைச்சர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

எனவே அவர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.

இந்தநிலையில் அந்த வடக்கு மாகாண மக்களின் பக்கம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் ஒத்துழைக்கும் என்று சல்மான் குர்ஸி;த் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் வடக்கு மாகாண மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து இந்த விடயத்தில் செயற்பட வேண்டும் என்றும் குர்ஸித் குறிப்பிட்டார்.

TAGS: