விடுதலைப் புலிகளினை நினைவுகூர எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்!- யாழ். தளபதி ஹத்துருசிங்க

bt_day_1தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி அமைப்பு ஒன்று தீர்மானம் நிறைவேற்றியுயுள்ள நிலையில், எவ்வாறாயினும் பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலி உறுப்பினர்களை  நினைவுகூர அனுமதிக்கப் போவதில்லையென யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறியுள்ளார்.

அமெரிக்காவில்கூட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் கடந்தகால செயற்பாடுகளை நினைவுகூர அல்லது அதன் மயானங்களை புனரமைக்க இராணுவம் அனுமதிக்காதென ஹத்துருசிங்க தமிழ் இணையத்தளமொன்றுக்கு கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின்லேடன் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்தபின் அவரது உடலுக்கு என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாத, இவ்வாறு தான் அமெரிக்கா பயங்கரவாத தலைவர் விடயத்தை கையாண்டது.

அதேபோன்று இறந்து போன தமிழீழ விடுதலை புலிகளினை நினைவுகூர எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறான முயற்சிகள் உரிய முறையில் கையாளப்படும் என்றும் அவர் கூறினார்.

யுத்தகாலத்தில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை புலி போராளிகளின் மயானங்களை புனரமைக்கும்படி கேட்கும் தீர்மானத்தை சாவகச்சேரி பிரதேசசபை அண்மையில் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS: