மலேசியாகினி இணையத்தள உரிமையாளரான எம்கினி டோட்காம் சென்.பெர்ஹாட் பிரசுர உரிமத்துக்காக செய்த விண்ணப்பத்தை எதிர்க்கும் அரசாங்கம், பிரசுர உரிமம் என்பது சலுகைதானே தவிர, உரிமை அல்ல என்ற வாதத்தை முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைத்தது.
பேச்சுரிமை மீதான அரசமைப்பின் பிரிவு 10-இன்படி பிரசுர உரிமம் வழங்கப்படுவது ஓர் உரிமை என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு என்று மூத்த அரசு வழக்குரைஞர் நோரிஷாம் இஸ்மாயில் வாதிட்டார்.
“அதை விண்ணப்பம் செய்துதான் பெற வேண்டும் என்பதால் அது ஓர் உரிமை அல்ல”, என்றாரவர்.
இதற்குமுன், மலேசியாகினிக்கு பிரசுர உரிமை இல்லை என்று நிராகரித்த உள்துறை அமைச்சரின் முடிவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிரசுர உரிமத்துக்கு மீண்டும் விண்ணப்பிக்கும்படி கூறி இருந்தது. அத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அரசுக்கு புரையோடி சீழ் வடிந்தால் வெறும் மூக்குச்சளி. எங்களுக்கு மூக்குச்சளி என்றால் அவர்கள் பார்வையில் சீழ். சுதந்திரத்தின் உண்மையான் பொருள் மனுக்குலத் தர்மப்படி நியாயமான உரிமைக்குச் சொந்தக்காரன். எவன் ஒருவன் நியாயங்களை வெளிப்படுத்துகின்றானோ அவன் ஒரு சுதந்திரம் உடைய மனிதன். அந்தச் சுதந்திரம் மறுக்கப்படும்போது அதே சுதந்திரத்தை தன் சுய்நலத்துக்கு பயன்படுத்தும் தன்னாதிக்கக்கர்ரர்களின் பிடிக்குள் சிக்குண்டு சுதந்திரமானச் சுதந்திரக்காற்றை சுவாசிக்கமுடியாமல் செய்வதே இதுபோன்ற் மேல்+மட்டக்காரர்களின் கீழ்த்தனமான வேலைகள்.