இரா.சம்பந்தன் சென்னையில் பாஜக தலைவர்களை சந்தித்து பேச்சு

sambanthanமருத்துவ காரணங்களினால் கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,  பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவித்தார்.

2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள லோக்சபா பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறுமென அபிப்பிராய வாக்கெடுப்புகள் காட்டும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதீய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தும் செயல்முறையை தொடங்கியுள்ளது என அக்கட்சியின் உத்தியோகத்தர்கள் கூறினர்.

பிரதானமாக தான் மருத்துவ காரணங்களினால் கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு சென்றிருந்த போதிலும், பா.ஜ.கட்சியின் தமிழ்நாட்டு தலைவர்களுடன் பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

பா.ஜ.க வின் தமிழ்நாட்டு கிளையின் தலைவர் என்.ராதாகிருஷ்ணா மற்றும் முன்னாள் தலைவர் எல்.கணேசன் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் என பலரை இரா.சம்பந்தன் சந்தித்து பேசியுள்ளார்.

TAGS: