முஸ்லிம், சிங்கள மக்களை வடக்கில் மீளக் குடியமர்த்தக் கோரி முஸ்லிம் அமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம்

IMG_2690வடக்கில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்துமாறு தேசிய சுதந்திர முன்னணியின் துணை அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்திற்கான அமைப்பு முஸ்லிம்கள் சிலரை திரட்டி கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கான அமைப்பின் ஏற்பட்டாளருமான மொஹமட் முஸ்ஸாமில்,

வடக்கு, கிழக்கை இணைக்க எடுக்கும் முயற்சிக்குள், தமிழ் இனவாத மற்றும் பிரிவினைவாத தேவைகள் இருக்கின்றன.

இரு மாகாணங்கள் இணைக்கப்படுவதால் முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

பிரிவினைவாத விடுதலைப் புலிகளினால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் 23 வருடங்கள் பூர்த்தியாகியது.

வடக்கில் இருந்த வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் உரிய கால எல்லைக்குள் மீள குடியேற்றப்பட வேண்டும் என்றார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் மாகாண சபையின் கன்னியமர்வில் உரையாற்றிய போது வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை குடியேற்றுவதில் அக்கறையெடுப்போம் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: