நாட்டின் வரலாற்றில் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிவினைவாத நோக்கில் செய்த அழிவுகளை விட அதிகமான அழிவுகளை செய்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார்.
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், தொழிற்கல்வி தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை.
அந்த கல்விமுறை தொடர்பில் அறியாமை அல்லது போதிய அளவில் புரிதல் இன்மை அல்லது தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வம் இன்மை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டலாம்.
தொழிற்கல்வி பற்றி சிந்திக்காமல், பல்கலைக்கழகம் சென்று வரவேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் கல்வித்துறையில் முன்னேற்றங்களை செய்யாததன் மூலம் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளனர்.
எமது நாடு பின்னடைவான நிலைமையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சோமாலியா, எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒவ்வொன்றும் வேறுப்பட்டது.
இதனால் எமது நாட்டின் பின்னடைவை வாத பிரதிவாதங்கள் ரீதியாகஏற்றுக்கொள்ள முடியாது.
சுகாதாரம் போன்ற பொதுவசதிககளை எடுத்து கொண்டால் இலங்கை உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த விடயங்களில் எத்தியோப்பிய, சோமாலியா போன்ற நாடுகள் மிகவும் கீழ் நிலையில் உள்ளன.
எமது நாட்டில் தொழில் கல்வியில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. 1893 ஆம் ஆண்டு தொழில் பயிற்சி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் 100 வருடங்கள் கழிந்தே அதனை சீர்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.