இராணுவத்தை வெளியேற்றுமாறு மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது!- உதய கம்மன்பில

udaya_gammanpila001வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­மாறு வட மாகாண சபை­யினால் கோரிக்கை விடுக்க முடி­யாது. அது மாகாண சபை விட­ய­தா­னத்­துக்கு அப்­பாற்­பட்­டது என்­ப­தைக்­கூட கூட்­ட­மைப்­பினால் புரிந்­து­ கொள்ள முடி­யாமல் உள்­ளது என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் மேல் மாகாண அமைச்­ச­ர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­று­வது அர­சாங்­கத்தின் கடமை என்று வட மாகாண சபை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தெரி­வித்­தி­ருந்­தமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

உதய கம்­மன்­பில இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

வட மாகாண சபையை கைப்­பற்­றி­யுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வா­றான கோரிக்­கை­களை முன்­வைக்கும் என்­பது எமக்குத் தெரியும். என­வேதான் வடக்குத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக 13வது திருத்தச் சட்­டத்தின் சில அதி­கா­ரங்­களை நீக்­கு­மாறு வலி­யு­றுத்­தி ­வந்தோம்.

இதே­வேளை 13 வது திருத்தச் சட்­டத்தில் இல்­லாத விட­யங்­க­ளையே வட மாகாண முத­ல­மைச்சர் தனது முதல் உரையில் கூறி­யுள்ளார்.

அதா­வது வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­மாறு வட மாகாண சபை­யினால் கோரிக்கை விடுக்க முடி­யாது. அது மாகாண சபை விட­ய­தா­னத்­துக்கு அப்­பாற்­பட்­டது.

இரா­ணுவம் எங்கு இருக்­க­வேண்டும் என்­ப­தனை நாட்டின் ஜனா­தி­பதி என்ற வகையில் ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிப்பார். அதில் எவரும் தலை­யிட முடி­யாது. இது மாகாண சபை­யுடன் தொடர்­பு­றாத விடயம்.

இது இவ்­வாறிருக்க மாகாண சபைக்­கு­ரிய ஆளு­நரை நிய­மிப்­பது ஜனா­தி­ப­தி­யாகும். ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யா­கவே ஆளுநர் நிய­மிக்­கப்­ப­டு­கின்றார். ஜனா­தி­பதி தனக்கு தேவை­யா­ன­வ­ரையே வட மாகாண சபையின் ஆளுந­ராக நிய­மிப்பார்.

ஆளுநரை விலக்க வேண்டுமாயின் அதற்கென அரசியலமைப்பில் ஒரு முறைமை காணப்படுகின்றது. அதனை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம். அதனைவிடுத்து ஆளுநரை விலக்கவேண்டும் என்று கோருவதில் அர்த்தம் இல்லை.

சட்டம் தெரிந்தவர்கள் வடக்கு மாகாண சபையில் இருந்த போதிலும்  இந்த விடயம் தெரியாமல் உள்ளனர்.

TAGS: