2009 மே மாதம் இசைப்பிரியா இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை அவரை, நிர்வாணமாக்கி கற்பழித்து கொலைசெய்தது இலங்கை இராணுவம்.
இதுபோல புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோரும், இராணுவத்திடம் சரணடைந்தார்கள். பின்னர் அவர்கள் கொல்லப்பட்ட புகைப்படங்களை இலங்கை இராணுவம் வெளியிட்டது.
அவர்கள் இருவரும் நடந்த சண்டையில் தற்செயலாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தார்கள். ஆனால் புலித்தேவன் நடேசன் மற்றும் நடேசன் அவர்களின் மனைவி ஆகியோரை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை இலங்கை இராணுவம் துன்புறுத்தியே கொலைசெய்தார்கள். முதலில் நடேசன் கண்முன்பாகபே அவர் மனைவியை இராணுவம் சுட்டது. பின்னர் நடேசனை சுட்டுக்கொன்றுவிட்டு, அதன்பின்னர் புலித்தேவனைக் கொலைசெய்தார்கள்.
அதற்கு முன்னதாக புலித்தேவன் கொண்டுசென்ற மடிக்கணணியை(லாப் டொப்) பை அவர்கள் எடுத்துள்ளார்கள். அதன் இரகசியக் குறியீடு(பாஸ்வேட்) போன்ற விபரங்களை அறிந்த பின்னரே அவர்கள் புலித்தேவை சித்திரவதைக்கு உள்ளாக்கி பின்னர் சுட்டுகொன்றுள்ளார்கள்.
இதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ இருப்பதாக இரகசிய தகவல்கள் சில தற்போது கசிந்துள்ளது. புலித்தேவனை சுட முன்னர், நடேசனையும் அவரது மனைவியையும் சுடும் காட்சிகள் அடங்கிய வீடியோவை சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவர், வெளிநாடு ஒன்றுக்கு கொண்டுசென்றுள்ளார்.
இதனை அவர் சில தமிழ் ஊடகவியலாளர்களிடம் கொடுத்துள்ளார். இவை முதலில் உண்மையானவையா என ஆராய்ந்த பின்னர், சிலர் அதனை வெளியிட உள்ளனர். இசைப்பிரியாவின் வீடியோ வெளியாகி தற்போது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள இவ்வேளை, மேலும் பல அதிர்சி வீடியோக்கள் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களுக்கு ஒரு அவமானச்சாவு ,வெள்ளைக்கொடி ஏந்தி அந்த இடத்திற்கு வரச்சொன்னவன் குற்றவாளியா ,வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை ,சுட்டுக்கொன்றவன் குற்றவாளியா,வெள்ளைக்கொடி ஏந்தி வந்தால் சமாதானம் என்று சட்டம் வகுத்தவன் குற்றவாளியா ,உலக மனித சமுதாயமே வெட்க்கி தலைகுனிவோம் .