அரசின் நல்லிணக்க முனைப்புக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை!வடக்குத் தேர்தல் வெளிப்படுத்துகின்றது: டக்ளஸ்

douglas devanandhaயுத்தத்தின் பின்னரான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளமையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுயநலத்திற்காக புலிகளுக்கு எப்போதும் துதி பாடியதில்லை எனவும், ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தலின் தோல்விக்கான பிரதான காரணமாக அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

சிறந்த தேர்தல் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உட்பூசல்கள் மற்றும் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வடக்கில்பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டமைக்கான காரணமாகும் எனவும் ஆளும் கட்சிக்கு தாவிய அனைவருக்கும் நன்மைகளை ஏற்படுத்துவர் என்ற நம்பிக்கை பலனிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றி மூலம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரன் இல்லாத உலகத்தையே தாம் எப்போதும் எதிர்பார்த்ததாகவும், சுயநலத்திற்காக புலிகளுக்கு எப்போதும் துதிபாடியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டணி வைத்துக் கொண்டமையை ஆளும் கட்சியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களின் குறைபாடுகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சரியான பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாத அரசியல் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சிக்கு எதிராக தமிழ் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன எனவும் கடந்த வட மாகாணசபைத் தேர்தலின் போது அநேகமான தமிழ் ஊடகங்கள் ஈ.பி.டி.பி. கட்சியின் தோல்வியை உறுதிசெய்ய கடும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகள் தங்களது தேவைக்காக உருவாக்கினார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் ஈ.பி.டி. பி அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

TAGS: