தமிழர்கள் விழிப்புடன் செயற்படாவிட்டால் எமது நிலங்களை மேலும் இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்!- கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசன்

kalaiyarasanபோராட்ட காலங்களில் எம்மினம் இழந்த இழப்புக்களுக்கும், விலைமதிப்பற்ற உயிர்ச்சேதங்களுக்குமான பலாபலன்களை இப்போது அரசாங்கம் கூறும் சமாதான காலத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா? என்ற வினாவிற்கு விடைகாண முடியாமல் உள்ளது என கிழக்கு மாகாண உறுப்பினர் த.கலையரசன் கூறினார்.

அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் தலமையில் ஆலையடி வேம்பு இந்துமாமன்ற கட்டடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் பிரதம அதிதியாகவும், மற்றும் பிரதேச தவிசாளர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள், இந்துமாமன்ற அங்கத்தவர்கள், தொண்டதர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கழந்து கொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்

66வருடகால போராட்ட வரலாற்றில் எம்மினம் பல இழப்புக்களை சந்தித்து இருக்கின்றது. அதாவது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அரசியல் ரீதியில் பல பின்னடைவுகளைச் சந்தித்து இருக்கின்றது.

அதனடிப்படையிலேதான் எமது நிலங்கள் நாளுக்குநாள் அபகரிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது இதற்கு இந்த நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து எமது சகோதர இனமான முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருசில அரசியல்வாதிகள் இன்றும் இவ்வாரான கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது பாதிக்கப்பட்ட சமூகம் என்றவகையில் கவலையளிக்கின்றது.

அம்பாறை மாவட்டத்திலே மூன்று இனமக்களும் பறந்து வாழ்கின்றார்கள் அவ்வாறு இருந்தபோதிலும் போராட்ட காலங்களில் எமது மக்கள் இரண்டு இனத்திற்கும் அஞ்சி வாழக்கூடிய சூழலே காணப்பட்டது இதே போன்றுதான் இன்றும் எமது மக்களின் நிலை காணப்படுகின்றது.

அன்று விடுதலைப் புலிகளை காரணம் காட்டி தமிழர் பிரதேசங்கள் அனைத்துத் துறைகளிலும் புறம்தள்ளப்பட்டு வந்தது அதே போன்ற ஒருநிலைதான் இன்றும் அரசாங்கம் கூறும் சமாதான காலத்திலும் நடைபெற்று வருகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ்ர் பிரதேசங்கள் இன்றும் எந்த அமச்சர் கண்களுக்கும் தென்படாமல் தங்களுடைய வாழ்வாதாரங்களை நடத்த முடியாத அளவிற்கு இன்றும் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.

இங்குள்ள அமச்சர்கள் (அம்பாறையில்) தாமும் தாம் சார்ந்த சமூகமும் என்ற அடிப்படையிலே அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஏனைய சமூகம் எப்படிப்போனாலும் பரவாயில்லை தமக்குக்கிடைக்கும் அனைத்து வளங்களையும் தாம்மாத்திரம் அனுபவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்படுகின்றார்கள்.

ஆனால் எமது தமிழ்த்தேசியத்தின் தலமைகளோ இந்த நாட்டிலே தமிழ்.முஸ்லிம் உறவுகள் சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் வாழவேண்டும் இதற்காக எம்மினம் பல விட்டுக்கொடுப்புக்களை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கும் இந்த காலகட்டத்தில் இதனை சகித்துக்கொள்ள இயலாத சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழ்களின் வீதாசாரத்தின குறைக்கவேண்டும் எனவும் திட்டம் தீட்டி செயற்படுகின்றார்கள்.

கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னராவது எமது இனத்திற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தால் அதில் உள்ள அமச்சர்கள் தமிழர்கள் விடயத்தில் அசமந்தப்போக்குடனே செயற்பட்டுக்கொண்டு வருகின்றார்கள்.

ஆகவேதான் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் தமிழர்கள் விளிப்புடன் இருந்து செயற்படாவிட்டால் எமது நிலங்களை மேலும் இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் எனவும் கூறினார்.

TAGS: