மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கையையும் சேர்த்துச் செல்வதில் தாங்கள் அக்கறையாக இருப்பதாக கொமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஷ் சர்மா கூறுகிறார்.
அத்துடன், இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்தத்துக்கு பொருந்தாத ஒரு விசயம் என்றும் கூறியுள்ள கொமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா அவர்கள், அது குறித்து தமக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச விசாரணை ஒன்றை இலங்கை மீது நடத்த கமலேஸ் சர்மா மறுப்பு
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடத்த அழைப்பு விடுப்பதற்கு பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா மறுப்பு வெளியிட்டுள்ளார்.
இது நடைமுறைக்கு சாத்தியமற்ற செயல் என்பதால் பொதுநலவாய அமைப்பு அதற்கு இணங்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய அமைப்பு இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க நடவடிக்கைகளின் ஊடாக இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த முனைப்பு எடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் எதிர்வரும் பொதுநலவாய கொழும்பு மாநாடும் ஏனைய மாநாடுகளை போன்றே நடைபெறும் என்று சர்மா குறிப்பிட்டுள்ளார்.