இலங்கை : ’56 மனிதர்களும் 144 யானைகளும் உயிரிழப்பு’

elephantsஇலங்கையில் யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக 56 மனிதர்களும், 144 யானைகளும் இந்த வருடத்தில் உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த வருடத்தில் 63 மனிதர்களும், 230 யானைகளும் உயிரிழந்திருப்பதாக அந்தத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வருடத்திலும்பார்க்க, இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும், ஒப்பீட்டளவில் மனித உயிரிழப்பில் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை என அந்த அதிகாரி கூறியிருக்கின்றார்.

கடந்த வாரம் கல்கமுவ பகுதியில் யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த மாதத்தில் மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காலநிலை மாற்றம் காரணமாகவே, மனிதருக்கும் யானைகளுக்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரித்திருப்பதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

கோடை காலத்தின் முடிவில் உணவு தேடி யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதனால், இரு தரப்பினருக்கும் இடையிலான முறுகல் நிலை ஏற்படுகின்றது. இது இரு தரப்பினருக்கும் உயிரிழப்பில் சென்று முடிவடைகின்றது என்று வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். -BBC

TAGS: