இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் அரசாங்க தரப்பு மேற்கொண்ட யுத்தக்குற்றங்களை வெளிப்படுத்தும் ”நோ பயர் சோன்” காணொளி, பொதுநலவாய நாடுகள் அமைப்பை கவலையடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுநலவாய நாடுகளின் செயலகத்தின் பேச்சாளர் ரிச்சட் உக்கு, நேற்று தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.
சனல் 4 தயாரித்த நோ பயர் சோன் காணொளியை தாம் தற்போதே பார்வையிட்டதாகவும், அதில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் எந்த அளவு கொடுமையானதாக இருந்திருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணொளியைக் காண இங்கே அழுத்தவும்
http://www.youtube.com/watch?v=zdhQ8knFMMk&feature=player_embedded
அத்துடன், சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதே, இலங்கை அரசாங்கத்துக்கு தற்போதுள்ள ஒரே ஒரு துருப்புச் சீட்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிரான எந்த சர்வதேச விசாரணைகளையும் அனுமதிக்க முடியாது என்று, பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.