இலங்கைக்கு எதிரான போராட்டங்களே எங்கள் மீது தாக்குதல் நடத்த காரணம்: இந்திய மீனவர்கள் கவலை

fisherman_002கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாகவே இலங்கை கடற்படையினர் தம்மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களை காட்டிலும் கடந்த இரண்டு வாரக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும் தாக்குதல் நடத்தும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இதற்கு இந்தியா, இலங்கை மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையும் காரணமாக இருக்கலாம் என்று தமிழக மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த வாரத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 30 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதற்கு மாறாக மற்றுமொரு நீதிமன்றம் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது.

இந்தநிலையில் தமது சகாக்களை விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வர மீனவர்கள் இன்று காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

TAGS: