சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே மற்றுமொரு காணொளியை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்யவும், முன்னாள் புலிகளை சந்திக்கவும் மக்ரே திட்டமிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு குறித்த செய்தி சேகரிப்புத் திட்டம் மக்ரேக்குக் கிடையாது.
இலங்கை தொடர்பில் மற்றுமொரு காணொளி தயாரிப்பதே மக்ரேயின் பிரதான இலக்காகும்.
மக்ரே ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் அறையொன்றை ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மக்ரேவை சந்திக்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்ரேவின் இலங்கை விஜயம் குறித்த பல தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.
அண்மையில் இசைபிரியா தொடர்பில் வெளியான காணொளியை கொழும்பில் அமைந்துள்ள மேற்குலக நாடொன்றின் தூதரகத்தில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுநலாய நாடுகள் செயலகத்தின் அழுத்தம் காரணமாகவே இலங்கை மக்ரேவிற்கு வீசா வழங்கியது என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ முகாம்களை காணொளியாக்க மக்ரேவிற்கு இடமளிக்க முடியாது பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.