அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் உண்ணாவிரத்தில் தம்பிராசா!- 2வது நாளாக தொடர்கிறது

thambirajahவலி.வடக்கில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்க கோரியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் த.தம்பிராசா நேற்று முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் யாழ்.முற்றவெளியிலுள்ள முனியப்பர் கோயில் முன்றலில் அவர் ஈடுபட்டு வருகின்றனர்.

வலி.வடக்கில் இராணுவத்தினர் பொது மக்களது காணிகளை பறித்துள்ளனர். அவற்றை உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

விசாரணைகளில் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

யுத்த்தில் விதவைகளான பெண்களின் வாழ்க்கை மற்றும் போரில் அங்கவீனமானவர்களின் வாழ்க்கை என்பனவற்றை கட்டியெழுப்ப வடகிழக்கு மாகாண சபைக்களுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும் போன்ற ஐந்து கோரிக்கைகளையே இவர் முன்வைத்துள்ளார்.

இதேவேளை தம்பிராசாவின் இந்த பேராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

TAGS: