டிஏபி கட்சித் தலைவர் கர்பால் சிங், பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சியான பாஸ் கட்சியின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை என்பதால் அதனிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
“இன-அடிப்படையில் அமைந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று சொன்னது உண்மைதான். துரதிஷ்டவசமாக பாஸும் அதில் ஒன்றுதான். ஆனால், பாஸ் பல்லின-உணர்வும் கட்சிக்குத் தேவை என்பதைப் புரிந்துகொண்டு முஸ்லிம்-அல்லாதவர் ஆதரவாளர் பகுதி ஒன்றையும் உருவாக்கி இருப்பதையும் நான் குறிப்பிடவே செய்தேன்.
“அச்செய்தியாளர் கூட்டத்தில் பாஸின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளவே இல்லை”.
எனவே, அக்கட்சியிடம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என புக்கிட் குளுகோர் எம்பியுமான கர்பால் கூறினார்.