சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் ஆவி வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பிரதமர்துறை அமைச்சரும் பிஎன் உச்சமன்ற உறுப்பினருமான ஷஹிடான் காசிம், வாக்காளர் பட்டியல் “அடையாளம் காணமுடியாத” வாக்காளர்கள் பலரைக் கொண்டிருப்பதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார் என சினார் ஹரியான் நாளேடு அறிவித்துள்ளது.
“ஆவி வாக்காளர்கள் யாருமில்லை. சில வாக்காளர்கள் சுங்கை லிமாவில் வாக்களிக்க பதிவு செய்துகொண்டு பின்னர் இசி-க்குத் தெரிவிக்காமல் வேறு இடங்களுக்குச் சென்றிருக்கலாம்”, என அப்துல் அசீஸ் கூறினார்.
மீண்டும் ஒரு ஆவி போர்? சிலர் இருக்கும் என்பார், சிலர் இல்லை என்பார். ஆனால் EC என்றுமே இல்லை என்றுதான் சொல்லும். காரணம் அது கிளிப்பிள்ளை.
தண்ணிதான் கொதிக்க வில்லையே எப்படி ஆவி வந்து ஆவி வாக்காளரை கொண்டு வரும் ,,போடா குருகேட்ட ec pu ந%%%