ஸ்ரீலங்காவைப் புறக்கணிப்பீர்: தமிழர்களுக்கு ஆதரவாக பெர்காசா பிரதமரிடம் கோரிக்கை

1 ibrahimஆச்சரியம் ஆனால் உண்மை.  மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா தமிழர்களுடன் சேர்ந்து,  இம்மாதப் பிற்பகுதியில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்காவில் தங்கள் சகோதரர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை எண்ணி ஆத்திரமடைந்துள்ள தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.

1 ibrahim 1“அங்கு பதற்றநிலை நிலவுகிறது. அதனால் பிரதமர் தாமே செல்லாமல் அவருக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சரை அனுப்புவதே ஏற்புடையதாக இருக்கும் என பெர்காசா கருதுகிறது”.

அத்துடன் அது, இந்தியர்களின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்பதன் அடையாளமாகவும் அமையும் என்றாரவர்.

இன்று பிற்பகல், பேரின்பம் இயக்கம் நடத்திய தீபாவளி பொது உபசரிப்பில்  கலந்துகொண்ட இப்ராகிம் அலி இவ்வாறு கூறினார்.