நவம்பர் 21-இல் நடைபெறும் பாஸ் கட்சித் தேர்தலில் மூன்று உதவித் தலைவர்கள் பதவிக்கு ஐவர் போட்டியிடுவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளந்தான் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹுஸாம் மூசா, தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், மத்திய செயல்குழு உறுப்பினர் அபு பக்கார் சிக் பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார், குபாங் கிரியான் எம்பி சலாஹிடின் ஆயுப் ஆகிய ஐவரும் அப்பதவியைக் குறிவைத்துக் களம் இறங்குகிறார்கள்.
கட்சித் தேர்தல் குழுத் தலைவர் அஸ்முனி அவி (இடம்) இன்று காலை இத்தகவலைத் தெரிவித்தார்.
கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், போட்டியின்றி பதவியைத் தக்க வைத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.