தமிழ்த் தேசியத்தின் தளத்தை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்த மொரீஷியசில் “புலம்பெயர்ந்த தமிழர் மாநாடு” நடைபெறுகின்றது.
தமிழீழம், தமிழ்நாடு உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் அனுசரணையுடன் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு மூன்று நாட்கள் இந்தமாநாட்டை ஒழுங்கு செய்து நடாத்துகிறது.
இன்றைய நாளில் மாவீரர்களுக்கான மற்றும் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவு தூபிக்கு மலர்வணக்கம் செலுத்தி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசியர் ராமசாமி மற்றும் பல அரசியல் ஆய்வாளர்கள், தமிழ்த் தேசிய ஊடகவியாளர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள்.
நல்லா வலுப்படுத்துங்க ,தமிழ் இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி மட்டும் வாங்கி கொடுக்காதேங்க்கடா
வரலாற்று பூர்வமாண நிகழ்வு இது. இதில் மலேசிய தமிழர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் அவர்களுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள்
Typed with Panini K
உலக தமிழ் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து இருப்பதை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிகழ்ச்சியில் எடுத்த தீர்மானங்கள்
முறையாக ஐநாவிடம் ஒப்படைப்போம்.
ஐயா தமிழ் தலைவர்களே கூடி கூடி பேசுவதால் எந்த பலனும் இல்லை . உலக தமிழர்கள் நாம் ஒன்று சேர்ந்து உலக பந்தில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி தமிழ் நாட்டை முதலில் அமைப்போம்.ஒரு சின்ன தொடக்கமாக இதை செய்வோம் வாருங்கள்.