பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டின் போது நிகழ்ச்சி நிரலுக்கு முரணாக பேச, பிரித்தானிய பிரதமர் கமரூனுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாநாட்டின் போது கமரூன் யோசனை ஒன்றை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த முயற்சிக்கு இடமளிக்கப்பட மாட்டாது.
மாநாட்டின் போது பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து பேசப்பட மாட்டாது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமருடன் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் கெமரூனெ பொதுநலவாய மாநாட்டில் நீர் சுதந்திரமாக பேச முடியாது,நரகாசூரன் எழுதிக்கொடுப்பதை படித்து பிரிட்டன் மக்களை அவமானப்படுத்துவதை விட சிறப்பு போகாமல் புறக்கணிப்பதே! மீறி பேசினால் மைக்கில் சவுண்டு வராது செய்வான் நரகாசூரன்!