கேலம் மேக்ரேவுக்கு எதிராக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

callum_macrae_001நான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படவில்லை என சனல் 4  ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

புலிகளிடம் நான் சம்பளம் பெற்றுக்கொள்ளவில்லை.

நான் ஓர் படைப்பாளி, படைப்பாளி தனக்கு விருப்பமான ஓர் படைப்பை உருவாக்கும் உரிமை காணப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றேன்.

எனினும், இம்முறை பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவே இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

மக்ரேவின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

தேசிய இணக்கப்பாட்டை ஊக்குவிப்பதற்கான இயக்கம் என்ற பெயர் தாங்கிய சுலோக அட்டைகளுடன் விமான நிலையத்தின் வரவேற்போர் கூடத்தில் கூடியிருந்தவர்கள், கெலும் மக்ரே விடுதலைப் புலிகளின் சம்பளப் பட்டியலில் இருப்பதாக கோசமிட்டனர்.

அவர்கள் அங்கிருந்து அகற்றப்படும் வரை சனல் 4 செய்தியாளர்கள் விமானநிலையத்தை விட்டு வெளியேறவில்லை.

அதன்பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் சிலர் கெலும் மக்ரேவிடம் கேள்வி எழுப்பினர்.

கெலும் மக்ரேவிடம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நீங்கள் ஏன் ஆவணம் படம் வெளியிட்டீர்கள் என்று அங்கிருந்த ஒருவர் கேள்வி எழுப்பினார்.

விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்கள் இழைத்துள்ளதாக நாங்கள் அந்தப் படத்தில் கூறியிருக்கிறோம். இரண்டு தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதில் நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம் என்று பதிலளித்தார் கெலும் மக்ரே.

அதேநேரம் அரசபடைகள் நடத்திய ஷெல் தாக்குதல்களில் தான் பெரும்பான்மையான மக்கள் உயிரிழந்தார்கள் என்பதிலும் தெளிவாக உள்ளோம் என்றும் கெலும் மக்ரே கூறினார்.

போரின் கடைசிக் கட்டத்தில் அரச படைகளின் ஷெல் தாக்குதல்களில் எந்தவொரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று கூறுகின்ற ஒரு அரசாங்கத்தைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம்.

இசைப்பிரியா மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அவர் உயிருடன் பிடிபட்ட பின்னர் தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்று இப்போது தெரியவந்திருக்கிறது என்றார் கெலும் மக்ரே.

சனல்4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கையை சென்றடைந்தார்! எதிராக கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்

சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

மக்ரே இலங்கைக்கு எதிராக சில காணொளிகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மக்ரேவின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்திற்கு அருகாமையில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் ஊடகக் குழுவில் மக்ரேவும் உள்ளடங்குகின்றார்.

சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்

சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான கெலும் மக்ரே, ஜொனத்தன் மில்லர் உட்பட அந்த நிறுவனத்தின் மூன்று ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்கவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

கெலும் மக்ரே உட்பட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகக் குழு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பொழுது விமான நிலையத்திற்கு வெளியில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் ஒன்றியம் என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைக்கு எதிராக செயற்பட்ட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான ஜொனத்தன் மில்லர், கெலும் மெக்ரே ஆகியோருக்கு இலங்கையில் கால் வைக்க வீசா அனுமதியை வழங்கிய அரசுக்கும், அரச அதிகாரிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக ஒன்றியத்தின் உறுப்பினரான எச்.கே.டி. சந்திரசோம தெரிவித்தார்.

சனல் 4 தொலை்ககாட்சியின் இந்த ஊடகவியலாளர்கள் இலங்கையின் செல்வாக்கை இழக்க செய்துள்ளதுடன் விடுதலைப்புலிகள் செய்த அட்டூழியங்களை சுட்டிக்காட்ட தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்

அதேவேளை சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளரும் சர்ச்சைக்குரிய போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரேவை விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்ட இலங்கை ஊடகங்கள், அவரது இலங்கைக்கு குற்றம் சுமத்தியதாக ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: