சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், ஈராண்டுகளுக்குமுன் அனைத்துலக தொழிலாளர் நிறுவன(ஐஎல்ஓ)த்திடம் ‘பொய்யான அறிக்கை’ஒன்றைக் கொடுத்தார் என்று கூறி இரண்டு தொழிற்சங்கங்கள்- மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி), தேசிய வங்கி ஊழியர் சங்கம்(என்யுபிஇ) ஆகியவை- அமைச்சரைச் சாடியுள்ளன.
அத்தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டிய பிகேஆர் கோலா லங்காட் எம்பி அப்துல்லா சனி அப்துல் ஹமிட், தொழிற்சங்கங்களுக்கான தலைமை இயக்குனருக்கு(டிஜிடியு) எதிராக என்யுபிஇ தொடுத்திருந்த வழக்கு தொடர்பில் அமைச்சர் அந்தத் தப்பான அறிக்கையைக் கொடுத்ததாக கூறினார்.
மேபேங்கில், உள்ளுக்குள்ளேயே அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் பதிவை ஏற்றுக்கொண்ட டிஜிடியு-வுக்கு எதிராக என்யுபிஇ தொடுத்த வழக்கு நவம்பர் 7-இல்தான் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், தீர்ப்பு வருவதற்கு ஈராண்டுகளுக்கு முன்பே 2011, அக்டோபர் 5-இல், நீதிமன்றம் டிஜிடியு-வுக்கு ஆதரவாக முடிவு செய்து விட்டதாக சுப்ரமணியம் ஐஎல்ஓ-விடம் தெரிவித்திருந்தார் என எம்டியுசி தலைவர் காலிட் அடான் செய்தியாளர்களிடம் விநியோகித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பொய்யான தகவலை ஐஎல்ஓ-வுக்குத் தெரிவித்தபோது சுப்ரமணியம் மனிதவள அமைச்சராக இருந்தார்.
இவன்தான் உலக பொய்யா புளுகனாசே
இந்த கொன்ன வாயன எவண்டா எவண்டா அரசியலுக்கு கொண்டு வந்தது
பட்டம்,பதவி பண ஆசை யாரை விட்டது?
இதெல்லாம் அரசியலில் சாதாரணம் அப்பா
Typed with Panini Keypad
நாணயம் இல்லே சுப்ரா……!
உண்மை இல்லே சுப்ரா……!
பொய் சொன்ன இவரை உள்ளே தள்ளுங்கள்