சில மணி நேரம் முன்னதாக பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள வர்த்தக பேரவையை ஆரம்பித்து வைத்த பின்னர், மகிந்தர் மாநாட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்.
அங்கே காத்திருந்த சனல் 4 கின் ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் , மகிந்தரைப் பார்த்து உங்களோடு பேசலாமா ? என்று கேட்டுள்ளார். மகிந்தரின் முகம் அப்படியே மாறிப்போனது. இல்லை என்று கூறிய அவர் பின்னர் சந்திக்கலாம் என்று தெரிவித்தார்.
போர் குற்ற ஆதாரங்கள் பற்றி ஜொனத்தன் மில்லர் கேள்வி எழுப்ப, அங்கிருந்து அவர் வேறு நபர்களுக்கு கை குலுக்கிவிட்டு அங்கிருந்து செல்ல முடன்றவேளை, ஜொனத்தன் மில்லர் மேலும் ஒரு ஆப்பை வைத்தார் !
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வராதது உங்களுக்கு கவலையாக இல்லையா என்று ஜொனத்தம் மில்லர் கேள்வி எழுப்பினார். இதனால் மேலும் சங்கடத்திற்கு உள்ளான மகிந்தர் காரில் ஏறி அமர முனைந்தார்.
இருப்பினும் அவர் உள்ளே செல்லாது , தாம் பிர்ன்னர் சந்திக்கலாம் எனவும், தேனீர் அருந்திக்கொண்டு கதைக்கலாமே என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
ஒட்டுமொத்தத்தில் மகிந்தர் எங்கே சென்றாலும், சனல் 4 ஊடகவியலாளர்கள் அவரை பிந்தொடர்ந்து கேள்விமேல் கேள்வி கேட்டுவருகிறார்கள்.