இலங்கையின் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து கமரூன், மஹிந்தவிடம் உறுதியான பேச்சு!

camarun_mahinda_003ஜனாதிபதி மகிந்தவுடனான சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை பிரித்தானிய பிரதமரின் டௌனிங் வீதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

டேவிட் கமரூன் நேற்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணித்தியாலம் நீடித்தது .

இதன்போது டேவிட் கமரூன் தமது கருத்துக்களை நேரடியாகவும் உறுதியாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கமரூன் இதன்போது வலியுறுத்தினார.

அத்துடன் உண்மையை கூறுவதே நல்லிணக்கத்துக்கு அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சந்திப்புக்கு முன்னர் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயமானது 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் சர்வதேச தலைவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயமாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் கொழும்பின் பொதுநலவாய மாநாடு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. எனினும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை காட்ட வேண்டும் என்றும் கமரூன் குறிப்பிட்டார.

போர் முடிவடைந்துள்ளமையால் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் நாட்டை ஒன்றுப்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கமரூன் வலியுறுத்தினார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

TAGS: