இலங்கை தமிழர்களை இந்தியாவிடமிருந்து கெமரோன் களவாடிவிட்டார்: தெ ஏசியன் ஏஜ்

camaron_jaffna_006இந்தியா இதுவரை இலங்கை விடயத்தில் வகித்து வந்த பங்காற்றலை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் களவாடிவிட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

தெ ஏசியன் ஏஜ் என்ற இணையத்தளம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

இதுவரைக்காலமும் இந்தியா இலங்கையின் விடயத்தில் முக்கிய பங்கை வகித்து வந்தது. எனினும் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற பிரித்தானிய பிரதமர் கெமரோன், இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரினார்.

இந்த கோரிக்கை பிரித்தானியாவிலுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள் மத்தியில் கெமரோனின் செல்வாக்கை அதிகரித்துள்ளது.

அதேநேரம் இலங்கை தமிழர்களுக்கு இந்தியா மட்டுமே பாதுகாப்பு என்ற நிலை மாற்றி கெமரோனை முழுமையாக நம்பும் அளவுக்கு இலங்கை தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் வந்துள்ளதாக தெ ஏசியன் ஏஜ் குறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியாவிடம் இருந்து கெமரோன் களவாடிவிட்டதாக ஏசியன் ஏஜ் தெரிவித்துள்ளது.

TAGS: