கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!- ஆய்வாளர் கீதபொன்கலன்

keethaponkalannகொமன்வெல்த் மாநாட்டை நடத்தி முடித்ததில் இலங்கைக்கு இராஜதந்திர ரீதியில் வெற்றியை ஏற்படுத்தியுள்ள போதிலும் அரசாங்கம் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களுக்கு அதிகளவு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த கொமன்வெல்த் மாநாடு குறித்து இலங்கைக்கு வெற்றியா அல்லது அழுத்தமா என்பது குறித்து இலங்கை ஆய்வாளர் கீதபொன்கலன் பிபிசிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்பாராத வகையில் மனித உரிமைகள் பிரச்சினையை மீண்டும் இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான அழுத்தங்கள் அதிகரித்திருப்பது தெளிவாக தெரிகின்றது. இது பெரியளவிலான அதிர்ச்சியை இலங்கை அடைந்திருக்கின்றது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து  வெளிப்படையாக பேசியிருந்தார். இதனை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் மக்களுடைய பிரச்சினைகளும் குரல்களும் மேலோங்கியிருப்பதன் காரணமாக இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைவிட தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.

பிரித்தானியா போன்ற பலமான நாடுகள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பிரச்சினையை மீண்டும் எழுப்பக்கூடிய சூழ்நிலைகளை இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் 2 வருடங்களுக்கு மகிந்த ராஜபக்ச பொதுநலவாய அமைப்பின் தலைவராக இருப்பதால் மனித உரிமைகள் மீதான பிரச்சினை தொடர்பில் சில நடவடிக்கைளை அவர் மேற்கொள்ள வேண்டுமென வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எனவே பொதுநலவாய மாநாட்டை நடத்தியதனால் இலங்கை அரசாங்கத்துக்கு  வெற்றியை விட அதிகளவு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என கூறலாம். ஏனெனில் அரசாங்கம் எதிர்பார்க்காத  வகையில் வடபகுதி மக்களுடைய மனித உரிமைகள் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளதனால் அதிகளவு அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என கூறக்கூடியதாக உள்ளது என நான் கருதுகின்றேன்.

TAGS: