எஸ்யுபிபி, மசீச, கெராக்கான் ஆகியவை ‘ஒன்றிணைவது கடினம்’

supp-217x300மசீச, கெராக்கான் ஆகிய கட்சிகளுடன் இணையும் சாத்தியம் அறவே இல்லை என்கிறார் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யுபிபி)-இன் சிபு கிளைத் தலைவர் வொங் சூன் கோ. அம்மூன்று கட்சிகளின் “அடிப்படை இலக்குகள் வெவ்வேறானவை” என்றாரவர்.

“மசீச சீனர்களின் கட்சி. எஸ்யுபிபி-யோ ஒரு பல்லினக்கட்சி”, என்று வொங் நேற்று கூச்சிங்கில் கூறினார்.

“மேலும், கிழக்கு மலேசியாவும் மேற்கு மலேசியாவும் மிகவும் வேறுபட்டவை. அதனால் ஒன்றிணைவது கடினம்”, என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கெராக்கான் தலைவர் மா சியு கொங் பிஎன்னை வலுப்படுத்த உதவும் என்பதால் மூன்றும் ஒன்றிணைவதை வரவேற்பதாகக் கூறியிருந்தார்.