என்எப்சி மீதான அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும்

nur jazlanமுந்தைய நாடாளுமன்ற  பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வால் தயாரிக்கப்பட்ட நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) மீதான அறிக்கையை இப்போதைய பொதுக் கணக்குக் குழு ஏற்றுக்கொண்டிருப்பதை அடுத்து அவ்வறிக்கை அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இன்று பிஏசி கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட்  (வலம்) இதைத் தெரிவித்தார். அவ்வறிக்கை மேலும் பல சுவையான விசயங்களை அம்பலப்படுத்தும் என பிஏசி உறுப்பினர்களில் ஒருவரான  டோனி புவா கூறினார்.