பிரித்தானிய பிரதமரை பட்டிக்காட்டான், கோமாளி எருமை என விமர்சித்த இலங்கை அரச ஊடகம்

camaron_jaffna_006பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, இலங்கை அரச ஊடகம் கமரூனை, பட்டிக்காட்டான், கோமாளி, எருமை என விமர்சித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தனது தலையங்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

கமரூன் விடுத்த கோரிக்கை தொடர்பில் அவர் சிறிதாக அல்ல பெரிய மன்னிப்பை கோரவேண்டும்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்காக வருகை தந்த இந்த பட்டிக்காட்டான் ஒட்டுமொத்தமாக கடுமை குறையாமல் நடந்து கொண்டார்.

இலங்கை மண்ணில் வந்திறங்கிய நேரத்தில் இருந்து பிரித்தானிய பிரதமர் ஏகாதிபத்திய மடையனாக நடித்தர். அவரது அவமரியாதை தொட்டு உணரக் கூடியதாக இருந்தது. அவர் விதிவிலக்கான பட்டிக்காட்டனாக காணப்பட்டார்.

அவர் தனது பங்கை சரியாக செய்யாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்களின் பாரம்பரிய ஏகாதிபத்திய உடமை சார்ந்த நடத்தையும் முதிர்ச்சியும் இயல்பாக அவரிடம் வெளிப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விருந்தோம்பல் வழங்கப்பட்ட மரியாதை மற்றும் பணிவுகளுக்கு மரியாதை வழங்காத கமரூன் அரசியல் சிறுபிள்ளை தனத்தில் ஈடுபட்டார்.

பிரித்தானிய பிரதமரின் கோமளித்தமான நடத்தை தீவிரமான விளைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தாது என்றாலும் அவரது செயல் ஆழமான அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெய்லி நியூஸ் ஆசிரியான ராஜ்பால் அபேநாயக்க இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத பலரை அவர் அண்மைய காலமாக தனது ஆசிரியர் தலையங்கம் மூலம் விமர்சித்து வருகிறார்.

TAGS: