சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும்: பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்

baroness_warsi_001இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய உள்ளக விசாரணைகளை நடத்தவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானிய மீண்டும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலகத்தின் சிரேஸ்ட அமைச்சர் பரோனெஸ் வர்ஸி இந்த கருத்தை நேற்று பிரபுக்கள் சபையில் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுநலவாய கொழும்பு மாநாட்டில் பிரித்தானிய பிரதம மந்திரி பங்கேற்றமை சரியான தீர்மானமே என்று பரோனெஸ் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் கமரூன் இலங்கைக்கு சென்றதன் மூலம் அந்நாட்டின் விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரமுடிந்தது. அத்துடன் 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாட்டு தலைவர் ஒருவர் இலங்கையின் வடக்கிற்கு விஜயம் செய்த முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது.

பிரதமரின் தீர்மானம் காரணமாகவே ஊடகவியலாளர்களுக்கு அங்கு சென்று விடயங்களை வெளிப்படுத்த முடிந்ததுடன் சர்வதேசத்துக்கும் காணாமல் போன மற்றும் இறந்துப்போன மக்களின் விடயங்களை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லமுடிந்தது என்று பரோனெஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானிய அமைச்சர் மைக்கல் பாலொன் பொதுச்சபையில் உரையாற்றும் போது பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டினார்.

TAGS: