பாஸ் கட்சி பக்காத்தான் ரக்யாட்டில் பங்காளிக் கட்சியாக இருந்து சுறுசுறுப்பாக பங்காற்றி வரும் என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் உறுதி கூறினார்.
“அந்தக் கூட்டணியில் மற்றவர்களுக்கு நாங்கள் சுமையாக இருக்க மாட்டோம்”, என்றாரவர்.
“எங்கள் பங்காளிக் கட்சிகளும் அப்படித்தான். பக்காத்தானில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதனை வலுப்படுத்தி இன்னும் சிறந்ததொரு தளத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
“நம்முன்னுள்ள பெரும் பொறுப்பை எதிர்கொள்ள அது அவசியமாகும்”, என ஹாடி கூறினார்.
ஹாடி, இன்று ஷா ஆலமில், அக்கட்சியின் 59ஆம் ஆண்டு முக்தாமாரில் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். உங்கள் side-kickகுகள் ஆளுக்கு ஒரு விதமா செய்தி வெளியிடுராங்களே…!! ஒரே குழப்பம் போங்கள். முன்பு உங்கள் கட்சியில் இருந்த ஓரளவு கட்டுப்பாடு இப்போது இல்லைங்க.
தொடரட்டும் உங்கள் சேவை….உண்மையான மக்களாட்சி நிலவும் வரை போராடுவோம்…
கொள்ளையர்களிடமிருந்து நாட்டை காப்பாற்றுவோம்…சுதந்திர நாட்டில் உரிமையை பறிகொடுக்க வேண்டாம்…