ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஐக்கிய இராச்சிய ஆட்சி முறைமையின் கீழ் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து போன்றவற்றுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதேவிதமாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியும். எங்கள் பிரதேசங்களின் ஆட்சி அதிகாரம் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அரசியல் அமைப்பில் காணப்படும் அதிகாரங்களை அமுல்படுத்த அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு முன்னதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.
வட மாகாண ஆளுனர், மாகாணசபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றார்.
இடம்பெயர்ந்தவர்கள் சிங்களவர்கள், தமிழர் அல்லது முஸ்லிம் என்ற பேதம் பாராட்டாது மீள்குடியேற்றப்படுவர்.
போர் இடம்பெறுவதற்கு முன்னதாக உண்மையாகவே குறித்த பிரதேசங்களில் வாழ்ந்திருந்தால் அவர்கள் அந்தந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். அதில் தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லிம் என்ற இன பேத்த்திற்கு இடமில்லை.
எனினும், திட்டமிட்ட அடிப்படையில் ஒர் இன சமூகத்தினர் குடியேற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுடான சந்திப்பு மற்றும் வடக்கு மாகாண சபை நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.