புலிகளின் அடுத்த தலைமையகம் மொரிசியஸ் நாட்டில் உருவாக்கப்படலாம்!

flagge-mauritiusதமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைமையகம் மொரிசியஸில் உருவாக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மொரிசியஸில் 9 வீதமானவர்கள் தமிழர்கள் எனவும், மொத்த சனத்தொகையில் 75 வீதமானவர்கள் இந்திய தமிழர் பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மொரிசியஸில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்கு உசிதமான பின்னணி காணப்படுகின்றது.

புலிகளுக்கு ஆதரவான தரப்பினர் பிரயோகித்த அழுத்தம் காரணமாக அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் மொரிசியஸ் நாட்டுப் பிரதமர் ராம் குலாம் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

TAGS: