பாஸ் கட்சித் தேர்தலில், நடப்பு உதவித் தலைவர்களில் ஹுசாம் மூசா, சலாஹுடின் ஆயுப் ஆகிய இருவரும் தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொண்டனர். கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் இப்ராகிம் துவான் மான் மூன்றாவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார்.
உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மற்றொரு நடப்பு உதவித் தலைவரான பொகோக் சேனா எம்பி மாபுஸ் ஒமாரும், பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினரான அபு பக்கார் சிக்கும் தோற்றனர்.
மூன்று உதவித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு வெள்ளிக்கிழமை நடந்தது. மொத்தம் 1,092 பேராளர்கள் வாக்களித்தனர். வாக்கு வேறுபாடு “மிக நெருக்கமாக” இருந்ததால் வாக்குகள் திரும்பவும் எண்ணப்பட்டு முடிவு இன்று காலை அறிவிக்கப்பட்டது.
சிறந்த தேர்வு. மாபுஸ் ஒமார், கெடா மாநிலம் மறுபடியும் பக்காத்தான் ஆட்சியின் கீழ் கைமாற முழு கவனம் செலுத்த இயலும்.