ஐ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்

beyani_001ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி ஷலோக்கா பேயானி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கயிருக்கும் அவர், வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை சந்திக்க உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டது.

இதனை தவிர ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஐ.நா பிரதிநிதி இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு செல்லவிருப்பதுடன், முல்லைத்தீவு பிரதேசத்திற்கும் விஜயம் செய்ய உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டது.

TAGS: