அரசியல் வனவாசத்திலிருந்து திரும்பும் மசீச முன்னாள் தலைவர் ஒங் தி கியாட், அடுத்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைவர் போட்டியிடுவார்.
இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அவர் “ஒங் தி கியாட்டான நான், தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்”, என்றார்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இரண்டாவது வேட்பாளர் அவர். ஏற்கனவே, நடப்புத் துணைத் தலைவர் லியோ தியோங் லாய் அப்பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
ஒங், மூன்றாவது தடவையாக அப்பதவிக்குப் போட்டியிடுகிறார். 2008-இல், சுவா ஜுய் மெங்கைத் தோற்கடித்து அவர் மசீச தலைவரானார். ஆனால், 2009 தேர்தலில் டாக்டர் சுவா சொய் லெக்கிடம் அவர் தோற்றார்.
சொய் லெக், பதவியைத் தக்கவைத்துக்கொள்ள போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறார். .