தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டேவிட் கமரூன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், லண்டன் பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:–
நான் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சென்று திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன.
முதலில், தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்த போது, அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்படாவிட்டால், நாங்கள் ஐ.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என்று தெளிவாக கூறிவிட்டேன்.
இலங்கையில், மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் வேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர்–சிங்களர் இடையே நல்லிணக்கம் வேண்டும்.
நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால்தான், அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது.
இவ்வாறு டேவிட் கமரூன் கூறியுள்ளார்.
உங்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இல்லையே!
10,000 கல் தொலைவில் உள்ள உங்களுக்கு தெரிகிறது.தரிதிரம் பிடித்த தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு ,மட சாம்பிராணிகளுக்கு வலிக்க வில்லை .தமிழா என்ன உன் தலைவிதி.
அத்தோடு யார் யார் தமிழனக்கு எதிரான சதிவேலைகளில் உடந்தையாக செயல் பட்டது என உலகிற்கு அம்பல படுத்த வேண்டும்!!!